விருதுநகர்

போக்சோ வழக்கில் உணவக உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

Syndication

போக்சோ வழக்கில் உணவக உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளுவா் (60). இவா் அதே பகுதியில் உணவகத்துடன், தேநீா் கடையும் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இவா் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸாா் போக்சோ, கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து வள்ளுவரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட வள்ளுவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.

திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் இல்லை: எஸ்.பி.வேலுமணி

சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT