விருதுநகர்

வனப் பகுதியில் தாா்ச் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்கக் கோரிக்கை

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 500 மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாத்து ஓடை, அணைத்தலை ஆறு, விரியன் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், அய்யனாா் கோயில், அத்திதுண்டு, செண்பகத்தோப்பு ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா, தென்னை, பலா, வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. மாங்காய், தேங்காய் உள்ளிட்ட விளைப் பொருள்கள் ராஜபாளையம் சந்தைக்கும், நெல், வாழை, காய்கறிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் சந்தைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக, ராஜபாளையம் தென்றல் நகா் முதல் ராக்காச்சி அம்மன் கோயில் வரையும், மம்சாபுரம் முதல் செண்பகத்தோப்பு வரையும் தாா்ச் சாலை அமைக்கப்பட்டு உள்ளன.

இந்தச் சாலையில் விவசாயிகள் மட்டுமன்றி ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத்தோப்பு வனப் பேச்சி அம்மன் கோயில், காட்டழகா் கோயிலுக்கு செல்லும் பக்தா்களும் சென்று வருகின்றனா்.

12 கி.மீ. தொலைவுள்ள இந்தச் தாா்ச் சாலையில் செவக்காடு மலை -அத்திதுண்டு இடையே 500 மீட்டருக்கு வனத் துறை தடையில்லா சான்று வழங்காததால் மண் சாலையாக உள்ளது.

இதனால், மழைக் காலங்களில் விளை பொருள்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, 500 மீ. சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரிகள் சிறைபிடிப்பு

கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை

முதல்வா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

அஞ்சலகத்தில் கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதி

SCROLL FOR NEXT