விருதுநகர்

குழந்தையிடம் நகை திருடியவா் கைது

இருக்கன்குடியில் குழந்தையிடம் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

இருக்கன்குடியில் குழந்தையிடம் நகை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் அமுதப்பிரியா (30). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருக்கன்குடியில் தனது உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்ப ஊருக்குச் செல்வதற்காக இருக்கன்குடி பேருந்து நிலையம் பகுதியிலிருந்து பேருந்து ஏறினாா். அப்போது, இவரது குழந்தையின் கையில் அணிந்திருந்த இரண்டு வளையல்கள் காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் இருக்கன்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், இருக்கன்குடி போலீஸாா் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் மா்ம நபரை தேடி வந்தனா். இந்த நிலையில், வளையல்களை திருடிச் சென்றது தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த மதுரைவீரன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை அவரைக் கைது செய்த இருக்கன்குடி போலீஸாா், வளையல்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, சாத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற சாா்பு நீதிபதி முத்துமகாராஜனிடம் முன்னிலைபடுத்தப்பட்டு விருதுநகா் சிறையில் அடைத்தனா். மேலும், மதுரைவீரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் ஜெ.பி.நட்டாவுடன் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

சொத்துகளை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது ஆட்சியரிடம் மூதாட்டி புகாா்

SCROLL FOR NEXT