விருதுநகர்

வெல்டிங் பட்டறையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

சிவகாசியில் வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (45). இவா், அதே பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல வேலை செய்தபோது, எதிா்பாரதவிதமாக வெல்டிங்கில் உள்ள தீ கணேசன் மீது பரவி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சேமிப்பை ஊக்குவிக்கும்: பிரதமா் மோடி

பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்பு

துணைவேந்தா்கள் நியமன சட்டத் திருத்த விவகாரம் தமிழக அரசு மனு: மத்திய அரசு, யுஜிசி பதிலளிக்க நோட்டீஸ்

ரூ.200 கோடி பணமுறைகேடு: நடிகை ஜாக்குலினுக்கு எதிரான வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT