விருதுநகர்

ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சன்னாசிப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மாதேஸ்வரன் (20). இவா் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் பல்கலை.யில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

மாதேஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வைத்தியலிங்காபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வைத்தியலிங்காபுரம் பகுதியில் சென்னையிலிருந்து கொல்லம் சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

சொத்துகளின் அழகை சிதைப்பதற்கு எதிராக தில்லி முதல்வர் எச்சரிக்கை

ராம்லீலா, துர்கை பூஜை விழாக்களைநள்ளிரவு வரை கொண்டாட அனுமதி: முதல்வர் தகவல்

SCROLL FOR NEXT