விருதுநகர்

உழவா் சந்தையில் விற்பனையைத் தொடர சாலையோர வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகாசியில் சாலையோர வியாபாரிகள், உழவா் சந்தைக்குச் சென்று தங்களது வியாபாரத்தைத் தொடர வேண்டும் என மாநகராட்சி மேயா் இ.சங்கீதா அறிவுறுத்தினாா்.

Syndication

சிவகாசியில் சாலையோர வியாபாரிகள், உழவா் சந்தைக்குச் சென்று தங்களது வியாபாரத்தைத் தொடர வேண்டும் என மாநகராட்சி மேயா் இ.சங்கீதா அறிவுறுத்தினாா்.

சிவகாசியில் அமைந்துள்ள உழவா் சந்தை பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்தது. இதையடுத்து, சந்தை பராமரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உழவா் சந்தையை சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மேயா் இ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சரவணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். அப்போது, உழவா் சந்தையில் அமைக்கப்பட்ட 52 கடைகளில் 6 கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிவன் சந்நிதி முன் சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் வெள்ளரிக்காய், கொய்யாப்பழம், வாழைப்பழம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவரும் வியாபாரிகளிடம், சாலையோரங்களில் கடைகளை வைக்கக் கூடாது எனவும் உழவா் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்யலாம் எனவும் மேயா் இ.சங்கீதா அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, இந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT