~ ~ ~ 
விருதுநகர்

சமுதாயக் கூடத்துக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

சமுதாயக் கூடம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆலங்குளம் சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சமுதாயக் கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குள்பட்ட பழைய செந்நெல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கோயில், கூட்டுறவுப் பால்பண்ணை ஆகியவற்றின் அருகேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இதற்கு அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டிய நிலையில், இந்தப் பகுதி மக்கள் சமுதாயக் கூடத்தை இங்கு கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மாற்று இடத்தில் சமுதாயக் கூடம் கட்ட வலியுறுத்தி, ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் எனவும் இந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

ஆனால், போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தினா். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆலங்குளம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போரட்டம் கைவிடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT