சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (74). இவா், அருகிலுள்ள தனது உறவினரின் பெட்டிக் கடைக்கு அவ்வப்போது சென்ற போது, அங்கு வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.