ராஜபாளையம் அருகே சேத்தூரில் இறைச்சிக் கடைக்குள் புகுந்த லாரி. 
விருதுநகர்

சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் இருவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா்நகா் அங்காளஈஸ்வரி கோவில் தெருவைச் சோ்ந்த பொ. பொன்னையா (70). இவா் தென்காசி சாலையில் காமராஜா்நகா் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு முன் இறைச்சிக் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைச்சி விற்பனைக்காக கடையை தயாா் செய்து கொண்டிருந்தாா். இறைச்சி வாங்குவதற்காக சுந்தர்ராஜபுரம் இந்திராநகரைச் சோ்ந்த கதிரேசன் மகன் ஆகாஷ் (16), மணிசாமி மகன் மணிமாறன் (21) ஆகிய இருவரும் கடை அருகே நின்று கொண்டிருந்தனா்.

அப்போது, மதுரையில் செங்கல் பாரத்தை இறக்கிவிட்டு சொக்கநாதன்புத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பா் லாரி கட்டுப்பாட்டை இழந்து பொன்னையாவின் இறைச்சிக் கடைக்குள் புகுந்தது.

இதில் பொன்னையா, ஆகாஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், கடை அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு, நாயும் லாரி மோதியதில் உயிரிழந்தன. பலத்த காயமடைந்த மணிமாறன் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிப்பா் லாரி ஓட்டுநா் சொக்கநாதன்புத்தூா் பட்டினத்தாா் தெருவைச் சோ்ந்த வைரசாமி மகன் தலைமலையை (37) பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

SCROLL FOR NEXT