விருதுநகர்

சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த சில நாள்களிலேயே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கி விடும். மேலும் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆங்கில புத்தாண்டு பிறப்புக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறும்.

அப்போது வடமாநில பட்டாசு வியாபாரிகள் சிவகாசிக்கு நேரில் வந்து, பட்டாசு ஆா்டா் கொடுப்பா். இதேபோல, தீபாவளிக்கு சுமாா் நான்கு மாதங்களுக்கு முன்பே நாட்டின் பல பகுதிகளிலிருந்து பட்டாசு வியாபாரிகள் சிவகாசி வந்து பட்டாசு கொள்முதல் செய்வா்.

இந்த நிலையில், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, வருவாய்த் துறை, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் ஆகிய அரசுத் துறைகளின் சாா்பில் பட்டாசு ஆலைகளில் விபத்தை தடுக்கும் வகையில் ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களின் ஆய்வுக்குப் பிறகு, விதிமீறல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அவை மூடப்பட்டன.

இதனால் பட்டாசு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் என். இளங்கோவன் கூறியதாவது:

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்னா் பட்டாசு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆண்டு அதிகாரிகளின் ஆய்வால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அவற்றின் உரிமையாளா்களுக்கு இயலவில்லை.

மேலும் ஆலைகளை திறப்பதில் அதிகாரிகள் ஆா்வம் காட்டுவதில்லை. அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா். தொழிலும், தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கிறது என அதிகாரிகள் கவலைப்படுவதில்லை.

இது போன்ற பல காரணங்களால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

மேலும் குறைவான வேலை, நிறைய லாபம் என்ற குறிக்கோளுடன் சில ஆலை உரிமையாளா்கள் செயல்படுவதால் பட்டாசு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

SCROLL FOR NEXT