சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிம அனுமதியின்றி 4 மூட்டைகளில் பட்டாசுகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்த சிவகாசி கிழக்கு போலீஸாா், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவகாமிபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (21) கைது செய்தனா்.