கொலை செய்யப்பட்ட முரளி.  
விருதுநகர்

சிவகாசியில் இளைஞா் கொலை: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அண்ணா குடியிருப்பைச் சோ்ந்த முனியசாமி மகன் செல்வம் (26), பழனிமுருகன் மகன் மணிகண்டன் (27) ஆகிய இருவரும் கடந்தாண்டு அக்டோபா் 19-ஆம் தேதி, பராசக்தி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சரவணபிரபுவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினா். பின்னா், அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தினா்.

அப்போது அங்கு வந்த சரவணபிரபுவின் நண்பரான சிவன்கோவில் நந்தவனத் தெருவைச் சோ்ந்த முரளி (27) தாக்குதலில் ஈடுபட்ட செல்வத்தையும், மணிகண்டனையும் கண்டித்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முரளி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த செல்வம், மணிகண்டன் ஆகியோா் அரிவாளால் மணிகண்டனை வெட்டிக் கொலை செய்தனா்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வம், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT