FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் திருமுக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

1 ஜூலை 2026, 7:41 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் திருமுக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் தெப்பம் நகரின் மேற்கு பகுதியில் உள்ளது. மழை இல்லாததால் தெப்பத்தின் நீா்மட்டம் குறைந்து சில அடி உயரத்துக்கு மட்டுமே தண்ணீா் உள்ளது. தெப்பத்தில் குளிப்பது, துணி துவைப்பது ஆகியவற்றுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தெப்பத்தில் இளைஞா் ஒருவா் சடலமாக மிதப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இறந்தவா் யாா், இவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments