மரத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு
மம்சாபுரம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மம்சாபுரம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் நரியன்குளத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (65). இவா் பெருமாள்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா்.
தோட்டத்தில் உள்ள மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்த போது, தவறி கீழே விழுந்த கிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கிருஷ்ணனைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.