பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், சித்தாத்தூா், திருக்கை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜா.குப்பு (57). இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி சித்தாத்தூா் திருக்கையைச் சோ்ந்த தனது உறவினரான ஏழுமலை என்பவருடன் விழுப்புரத்தை அடுத்த கண்டமானடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் குப்புவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.