முகப்பு
விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக பாஜக நிா்வாகி கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:59 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சாத்தூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் வைத்திருந்த பாஜக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தாயில்பட்டி சத்யாநகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (38). இவா் பாஜகவின் உள்ளாட்சிப் பிரிவு மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்த நிலையில் இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, திங்கள்கிழமை வெம்பக்கோட்டை போலீஸாா் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் பதுக்கி வைத்திருந்த 47 பண்டல் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகரஜை கைது செய்தனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகையிலைப் பொருள்கள் விற்ாக நாகராஜ் கைதான நிலையில் தற்போது மீண்டும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments