சேவை: சொல்லத் துடிக்கும் "மனசு'!
தமிழ்நாடு முழுவதும் தாய்-விழுது என்னும் மக்கள் சார்ந்த அமைப்பின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியிலும், அரவாணிகளுக்கு இருக்கும் திறன்களைப் பயன்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக சமூகத்தில் சொந்தக் காலி
தமிழ்நாடு முழுவதும் தாய்-விழுது என்னும் மக்கள் சார்ந்த அமைப்பின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியிலும், அரவாணிகளுக்கு இருக்கும் திறன்களைப் பயன்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக சமூகத்தில் சொந்தக் காலில் நிற்பதற்கும் வழிவகை செய்து வருகிறது சென்னை, அடையாறில் இயங்கும் தாய்-வி.எச்.எஸ். தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
இந்த அமைப்பு புதிதாகத் தொடங்கியிருக்கும் ஹெல்ப்-லைன் வசதிக்குப் பெயர் "மனசு'. அரவாணிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையே நல்லுறவை வளர்க்கும் பாலமாக விளங்குவதுதான் இந்த ஹெல்ப்-லைனின் நோக்கம்.
"கதவு திறந்தே இருக்கிறது; மனம் திறந்து வாருங்கள்!' என்னும் வரிகள், "தாய்' திட்ட இயக்குனர் டாக்டர் லஷ்மி பாயின் அறைக்கு வெளியே ஒளிர்கிறது. "மனசு' குறித்து அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
""எங்களின் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு முழுவதும் பதினைந்தாயிரம் அரவாணிகள் எங்களின் நலத்திட்டங்களால் பயனடைந்திருக்கிறார்கள். இதுவரை அரவாணிகளின் தனித் திறமைகளைக் கொண்டு அவர்களுக்கு உதவி வந்தோம். தற்போது அரவாணிகளைக் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்து, அவர்களை வீட்டுப் பணியாளர்களாகவும், அவர்களுக்கு உரிய கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சிகளை அளித்து சமூகத்தில் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முயற்சி எடுத்து வருகிறோம். இதற்கு முதற்கட்டமாக மக்களின் எண்ணங்களை தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த ஹெல்ப்-லைன் வசதியை ஆரம்பித்திருக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களை முக்கியமாகச் செய்கிறோம். ஒன்று, பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது. குடும்பத்தின் ஆதரவு கிடைக்காமல் போவதால்தான், அன்புக்கு ஏங்கும் அரவாணிகளின் வாழ்க்கை திசை மாறிப் போகிறது. குடும்பத்தில் அவர்களுக்கு அன்பு கிடைக்கும்பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை பிரச்னைக்குரியதாவதற்கு வாய்ப்பே இல்லை.
இரண்டாவது, அரவாணிகளுக்கு ஆலோசனைகளை அளிப்பது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் இருக்கும் நடைமுறைப் பிரச்னைகளையும், நாள்பட்ட பிரச்னைகளையும் எடுத்துக் கூறி, அரவாணிகளை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அறிவுறுத்துகிறோம்.
"மனசு' ஹெல்ப்-லைன் வசதியால் அரவாணிகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்களும், சமூகம் பழிக்கும் செயல்களிலிருந்து மீண்டு புது வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும் அரவாணிகளும் ஒரேசமயத்தில் பயனடைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது'' என்றார் டாக்டர் லஷ்மி பாய்.
ய்