பாதுகாப்பான தீபாவளி!
பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை: பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள். பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:33 PM
- பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
- பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
- பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
- சட்டைப் பையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது.
- வெடிக்காத பட்டாசுகளை எக்காரணத்தைக் கொண்டும் கையில் எடுக்கக்கூடாது.
- பட்டாசுகளை வீட்டிற்கு வெளியில்தான் வெடிக்க வேண்டும்.காலியான மைதானத்தில் வெடிப்பது கூடுதல் பாதுகாப்பு.
- ராக்கெட் போன்ற வாணவேடிக்கைகளைக் குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்கவும்.
- வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்காதீர்கள்.
- ஒரு வாளி நீரை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டேதான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- எல்லாப் பட்டாசுகளையும் நீண்ட வத்தியாலேயே கொளுத்தி வெடிக்க வேண்டும்.
- எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாதீர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
- தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.