முகப்பு
தினமணி கதிர்

சுற்றுச்சூழல்: கேசரியைக் கலராகத்தான் சாப்பிட வேண்டுமா?

வீட்டில் எளிதாகச் செய்யும் இனிப்பு கேசரி. முந்திரிப் பருப்பு, திராட்சை என அதில் சேர்க்கப்படுகிற பொருட்களில் சுவையும், சத்தும் அதிகம். ஆனால் கேசரி என்றால் அது மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணமாகத்தான் இருக்கிற

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:00 PM
பகிர்:

வீட்டில் எளிதாகச் செய்யும் இனிப்பு கேசரி. முந்திரிப் பருப்பு, திராட்சை என அதில் சேர்க்கப்படுகிற பொருட்களில் சுவையும், சத்தும் அதிகம். ஆனால் கேசரி என்றால் அது மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணமாகத்தான் இருக்கிறது. ""இப்படி கேசரியைக் கலராகத்தான் சாப்பிட வேண்டுமா? கேசரியில் சேர்க்கப்படும் கேசரி பவுடரில் கார்ஸினோஜன் என்ற பொருள் இருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது'' என்கிறார் சித்த மருத்துவரான சிவராமன். சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள ஆரோக்யா சித்த மருத்துவமனையில் இருந்த அவரிடம் பேசினோம்.

 ""குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் கலரிலும் கார்ஸினோஜன் இருக்கிறது. ஆனால் நிறையப் பேருக்கு இது தெரிவதில்லை. கலர் கலராக உள்ள பொருட்களைச் சாப்பிடுவதிலும், அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதிலும் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை'' என்ற அதிர்ச்சி உண்மையைச் சொல்கிறார் சிவராமன்.

 ""அதுமட்டுமல்ல, மனிதர்களுக்கு முக்கியமானது உண்ண உணவு, இருக்க இடம். வீட்டின் கூரையை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை உருவாக்கக் கூடியது. இதைப் பற்றிய விழிப்புணர்வு நமது மக்களிடம் இல்லை. காங்கிரீட் தளங்களைவிட விலை மலிவாக இருப்பதால் ஏழைகளின் குடியிருப்புகளின் மேற்கூரையை ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை வைத்தே அமைக்கிறார்கள்'' என்கிறார் அவர்.

 ""முதலில் எல்லாம் நமதுநாட்டில் தொற்றுநோய்கள்தாம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. சுதந்திரம் அடைவதற்கு முன்பு - ஏன் அதற்கு 300 ஆண்டுகளுக்கும் முன்பு கூட- காலரா, அம்மை, ப்ளேக் போன்ற நோய்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஓரே நேரத்தில் மாண்டு போன சம்பவங்கள் உண்டு. இறந்தவர்களைத் தனித்தனியாக அடக்கம் செய்ய முடியாமல் மொத்தமாகப் புதைத்தனர். எரித்தனர். அந்த அளவுக்குத் தொற்று நோய்களால் கடுமையான பாதிப்புகள் இருந்தன. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்பு, பொது சுகாதாரம் முன்பைவிட மேம்பட்டதையடுத்து தொற்றுநோய்களால் நாம் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு எந்தவிதத்திலும் குறையாமல் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறோம்'' என்கிறார் சிவராமன்.

 ஆஸ்பெஸ்டாûஸப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரிடம் பேசினோம்.

 ஆஸ்பெஸ்டாûஸப் பயன்படுத்தி வீட்டின் மேற்கூரையை அமைக்கிறார்கள். சில தற்காலிக குடியிருப்புகளின் சுவர்களே ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் அமைக்கிறார்கள்.



*
ஆஸ்பெஸ்டாஸ் மனிதனுக்குப் புற்றுநோயை எப்படி உருவாக்குகிறது?

 ஆஸ்பெஸ்டாஸ் நுண்ணிய நார்ப் பொருளால் ஆனது. இந்த நார்ப்பொருள் காற்றில் கலக்கிறது. இந்தக் காற்றைச் சுவாசிப்பவரின் நுரையீரலுக்குள் இந்த நுண்ணிய நார்ப்பொருள் சென்றுவிடுகிறது. இதனால் முதலில் சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுகிறது. நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்கிறது. இந்த நுண்ணிய நார்ப்பொருளில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய கார்ஸினோஜன் இருப்பதால் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது. இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்த கார்ஸி

 னோஜன் உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதுதான். நுரையீரலில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். தோல் புற்றுநோயை உருவாக்கலாம். தைராய்டு புற்றுநோயை உருவாக்கலாம்.

 உலக சுகாதார நிறுவனம் ஆஸ்பெஸ்டாûஸ புற்றுநோயை உருவாக்கக் கூடியது என்று அறிவித்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் ஆஸ்பெஸ்டாûஸ தடை செய்துவிட்டார்கள். நமது நாட்டில் இன்னும் தடை செய்யவில்லை. மக்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை.

  * இக்காலத்தில் ஆஸ்பெஸ்டாûஸத் தவிர்க்க முடியுமா? ஏழை மக்கள் குடியிருக்க அதிக செலவில்லாமல் வீடு கட்ட அதுதானே பொருத்தமானது?

 முதலில் நமதுநாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை வீடு கட்டப் பயன்படுத்தவில்லை. ஏழைகளின் வீடுகளில் நாட்டு ஓடுகள், சீமை ஒடுகளைப் பயன்படுத்தித்தான் கூரைகளை அமைத்தார்கள். இந்த ஓடுகள் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தவை. இந்த ஓடுகளிடையே இடைவெளி இருக்கும். இடைவெளி வழியாக காற்று வீட்டுக்குள் வரும். வீட்டினுள் ஏற்படும் வெப்பம் இந்த ஓடுகளின் இடைவெளி வழியாக வெளியே செல்லும். வீட்டில் அதிகம் வெப்பம் ஏற்படாது. எந்த ரசாயனப் பொருட்களும் கலக்காமல், வெறும் மண்ணால் இந்த ஓடுகள் செய்யப்பட்டன. அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

 ஆனால் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டைப் பயன்படுத்தும்போது வீட்டில் உள்ள வெப்பம் வெளியே செல்ல வழியில்லை. அதிலும் வெயில் காலத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்த வீட்டில் ஒருவரால் இருக்கவே முடியாது.

 நமது நாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை வீடு கட்ட மட்டும் அல்ல, தொழிற்சாலை அமைக்க பெரிய அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். அலுவலகக் கட்டிடங்களுக்கு இப்போது ஆஸ்பெஸ்டாûஸப் பயன்படுத்தி மேற்கூரையை அமைக்கிறார்கள். கூரைக்குக் கீழே ஃபால்ஸ் ரூஃபிங் அமைக்கிறார்கள். பிறகு ஏஸியைப் பொருத்துகிறார்கள். இப்படிச் செய்தால் கூட ஆஸ்பெஸ்டாஸôல் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது.

* ஆஸ்பெஸ்டாûஸப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகளில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இம்மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றனவா?

 ஆஸ்பெஸ்டாûஸப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களை புற்றுநோய் தாக்குகிறது. என்றாலும் அதைவிட அதிகம் பாதிப்பு ஏற்படுவது ஆஸ்பெஸ்டாûஸ உருவாக்கும் தொழிற்சாலைகளில்தாம். ஆஸ்பெஸ்டாûஸப் பயன்படுத்திச் செய்யப்படும் வேறு சில பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும் கூட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் ஆஸ்பெஸ்டாஸின் நுண்ணிய நார்ப் பொருள் காற்றில் கலப்பதற்கும், அந்தக் காற்றை அங்கு வேலை செய்பவர்கள் சுவாசிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

 "ஆஸ்பெஸ்டாஸில் பல வகைகள் இருக்கின்றன. அதில் வெள்ளை ஆஸ்பெஸ்டாûஸப் பயன்படுத்தினால் பாதிப்பில்லை. இந்தியாவில் பெரும்பாலும் வெள்ளை ஆஸ்பெஸ்டாûஸத்தான் பயன்படுத்துகிறோம். எனவே ஆஸ்பெஸ்டாஸில் பாதிப்பு என்பதெல்லாம் வெளிநாடுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இந்தியாவில் ஆஸ்பெஸ்டாûஸ எதிர்ப்பது வீண் வேலை' என்று சிலர் சொல்கிறார்களே?

 க்ரிúஸôடைல் என்று அழைக்கப்படும் வெள்ளை ஆஸ்பெஸ்டாஸிலும் புற்றுநோயை ஏற்படுத்துக்கூடிய கார்ஸினோஜன் இருக்கிறது என்பதே உண்மை. உலகம் முழுவதும் ஒவ்வோராண்டும் 90 ஆயிரம் பேர் ஆஸ்பெஸ்டாஸôல் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். மேலும் உலக சுகாதார நிறுவனம் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்ஸினோஜன் அடங்கியுள்ள பொருட்களில் வெள்ளை ஆஸ்பெஸ்டாûஸயும் சேர்த்துத்தான் கூறியிருக்கிறது.

* ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை அகற்றி புதிய கான்கிரீட் தளங்களை அமைக்க அதிகச் செலவு பிடிக்குமே?

 நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. பெரும்பாலும் சிறிய, பெரிய தொழிற்சாலைகள், பட்டறைகளில்தான் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சிறிய தொழிற்சாலைகளில் கூரைகளை மாற்ற தொழிற்சாலைகளை நடத்துபவர்களின் நிதிநிலைமை இடம் தராது. எனவே சிறிய தொழிற்சாலைகளில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை மாற்ற அரசு உதவ வேண்டும். இனிமேல் புதிதாக ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை அமைக்காமல் இருக்க, ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் ஆஸ்பெஸ்டாஸின் பாதிப்புகளில் இருந்து நாம் தப்பித்துவிடலாம். 

முழு கட்டுரையைப் படிக்க →