முகப்பு
தினமணி கதிர்

அறிவியல்: எந்திரா..!

மும்பை ஐ.ஐ.டி.யின் ஓர் அங்கம் "சொசைட்டி ஆஃப் இன்னோவேட்டிவ் அண்ட் அன்ட்ரபிரனர்ஷிப்'. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் முக்கிய நோக்கம், கல்லூரி மாணவர்களிடையே ரோபோ குறித்த கல்வியை பரப்புவதுதான். நான்கு வரு

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:31 PM
பகிர்:

மும்பை ஐ.ஐ.டி.யின் ஓர் அங்கம் "சொசைட்டி ஆஃப் இன்னோவேட்டிவ் அண்ட் அன்ட்ரபிரனர்ஷிப்'. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் முக்கிய நோக்கம், கல்லூரி மாணவர்களிடையே ரோபோ குறித்த கல்வியை பரப்புவதுதான். நான்கு வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இவர்களின் இந்த "திங்க் லேப்' முயற்சியினால் நாடு முழுவதும் ஏறக்குறைய 250 கல்லூரிகளில் ரோபோ கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம்களும் சோதனைக் கூடங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பள்ளி அளவிலும் ரோபோ கல்விக்கான சோதனைக் கூடங்களை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது சென்னையின் சில பகுதிகளிலிருக்கும் "ரிலையன்ஸ் ஃபிரஷ்' அங்காடிகளில் ரோபோடிக் பயிற்சி முகாமை நடத்திவருகின்றனர். முகாமைக் குறித்து அமைப்பின் மேலாளர் அருண் எபினேசர் நம்மிடம் பேசியதிலிருந்து...

""ரோபோடிக் லேப்களை வடிவமைக்க விரும்பும் பள்ளிகளுக்கு அதற்குண்டான ஆலோசனைகளையும் உபகரணங்களையும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருகிறோம். ஜ்ஜ்ஜ்.ழ்ர்க்ஷர்.ண்ய் என்னும் எங்களின் இணைய தளத்தில் ரோபோடிக் லேப்களைப் பள்ளிகளில் அமைப்பதற்கான மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். கோடைக்காலப் பயிற்சியாக ரோபோ தயாரிக்கும் நுட்பத்தையும் அதன் செயல்பாடுகளைக் குறித்தும் ஜுனியர், சீனியர் என்னும் இரு பிரிவு மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். ஜுனியர் பிரிவில் நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் சீனியர் பிரிவில் ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவர்களும் இந்தப் பயிற்சி முகாமில் பங்கெடுக்கலாம். ஜுனியர் பிரிவு மாணவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமும் சீனியர் பிரிவு மாணவர்களுக்கு ரூபாய் ஏழாயிரத்து ஐநூறும் பயிற்சிக்கான கட்டணங்களாக நிர்ணயித்துள்ளோம். வசதியான பள்ளி மாணவர்கள் முதல் நடுத்தர பள்ளி மாணவர்கள் வரை உற்சாகமாக இந்தப் பயிற்சி முகாமில் பங்கெடுக்கின்றனர்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்னும் நான்கு துறைகளும் இணையும் துறை ரோபோடிக். இந்தத் துறையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நான்கு துறையிலுமே பயிற்சி கிடைக்கும். ஜுனியர் மாணவர்களுக்கெனவும் சீனியர் மாணவர்களுக்கென்றும் தனித்தனியே பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஜுனியர்களுக்கு ரிமோட் கண்ட்ரோல் ஆபரேட்டட் ரோபோட்களைத் தயாரித்து இயக்குவது பற்றி ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றது. சீனியர் மாணவர்களுக்கு, தானியங்கியாக இயங்கும் ரோபோக்களை வடிவமைப்பது அதன் நுட்பங்களைத் தெரிந்துகொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஜுனியர், சீனியர் இரு பிரிவினருக்குமே ரோபோ செய்வதற்கான உபகரணங்கள் அடங்கிய பெட்டி கொடுக்கப்படும். இதிலிருக்கும் பொருட்களைக் கொண்டு ஜுனியர் மாணவர்கள் 50லிருந்து 100 வகையான ரோபோக்களைச் செய்யமுடியும். சீனியர் மாணவர்களுக்கு வழங்கப்படும் பெட்டிகளில் "சிம்பிள்' சாஃப்ட்வேர் ஒன்று இருக்கும். இதன் மூலம்தான் ரோபோக்களை தானியங்கியாக இயங்குவதற்கான உத்தரவுகள் கிடைக்கும். க்யூ.டி. டெக்னாலஜி என்ற புரோக்ராமிங் தொழில்நுட்பமும் இருக்கும்.

வெவ்வேறு பணிகளைச் செய்வதற்காக விதவிதமான ரோபோக்களை டிசைன் செய்யமுடியும்.ரிமோட் கண்ட்ரோலின் மூலமாகக் கட்டுப்படுத்தப்படும் ரோபோக்கள் முதல் தானியங்கி முறையில் இயங்கும் பல்வேறு வித ரோபோக்களைச் செய்வதற்கு, ஆறு நாட்களில் தினம் இரண்டு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

ரோபோடிக்ஸ் என்றால் வித்தியாசமாகப் பார்க்கவேண்டியதில்லை. பள்ளிகளில் படிக்கும் நிறைய விஷயங்களை நடைமுறை வாழ்க்கையில் எப்படி செயல் வடிவம் பெறுகிறது என்பதை மாணவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் நேரடியாகக் காணலாம். அறிவியலை எல்லா மாணவர்களின் கைகளுக்கும் கொண்டுவருவதே இந்த பயிற்சி முகாமின் நோக்கம்'' என்றார் அருண் எபினேசர்.

முழு கட்டுரையைப் படிக்க →