தினமணி கதிர்

திரைக்கதிர்

இதுவரை தன்னுடைய அம்மா, மேனேஜர் ஆகியோர் மூலம் கால்ஷீட் விவகாரங்களையும் சம்பளத்தையும் பேசி வந்த அஞ்சலி

மனோஜ் கிருஷ்ணா

நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் அனுஷ்கா. தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு ("வானம்' படத்தில் நடித்தவர்) தான் நடிக்கும் படங்களிலும் தனக்குத் தெரிந்தவர்கள் இயக்கும் படங்களிலும் சிறு கதாபாத்திரங்களை வாங்கிக் கொடுக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல், அமலா பாலுக்கு இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளார். "இரண்டாம் உலகம்' படக் குழுவினருக்கு இருபது நாள் யோகா கோர்ûஸ இலவசமாகக் கற்றுத் தந்துள்ளார்.

தற்போது, நீண்ட காலம் தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவருக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்துள்ளதோடு அதை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிக்கொள்ளுமாறும் ஆலோசனை கூறியிருக்கிறார்.

-------------------------------------------------------------------------------------------

இதுவரை தன்னுடைய அம்மா, மேனேஜர் ஆகியோர் மூலம் கால்ஷீட் விவகாரங்களையும் சம்பளத்தையும் பேசி வந்த அஞ்சலி, இனி படம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் நேரடியாக என்னிடம்தான் பேச வேண்டும் என தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் கூறியுள்ளார்.

----------------------------------------------------------------------------------------------

"பாட்ஷா', "அண்ணாமலை', "வீரா', "பாபா' ஆகிய படங்களை இயக்கியுள்ள சுரேஷ்கிருஷ்ணா, ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை மையமாக வைத்து "பாட்ஷாவும் நானும்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகம் வெளியாகிறது.

---------------------------------------------------------------------------------------------

சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தவரும்

600-க்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணப் படங்களை இயக்கியவருமான சந்திரமோஹன் "செüந்தர்யா' படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே "பாலக்காட்டு மாதவன்' ("அந்த ஏழு நாட்கள்' படத்தில் கே.பாக்யராஜின் கதாபாத்திரம்) என்ற பெயரில் புதிய படத்தை ஆரம்பித்து விட்டார். விவேக், சோனியா அகர்வால், "செம்மீன்' ஷீலா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். படத்தின் அறிமுக விழாவில்,"" இந்தப் படத்தில் நான் கட்டாயம் நடிக்க வேண்டும்; அப்போதுதான் தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும்'' என்று கூறினார் பாக்யராஜ். இதையடுத்து படத்தின் கதையை இயக்குநர் சந்திரமோஹன் பாக்யராஜிடம் கூற, அவர் திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்து கதைக்குச் சுவாரஸ்யம் கூட்டியுள்ளார்.

---------------------------------------------------------------------------------------------

"காமராசு', "அய்யாவழி' படங்களையடுத்து பி.சி.அன்பழகன் "நதிகள் நனைவதில்லை' என்ற புதிய படத்தை இயக்கி தயாரிக்கிறார். இதில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுனேனா. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் ஜெய்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிள்ளைகளைப் படிக்க வைப்பதுடன் பெற்றோர்களின் கடமை முடிந்துவிடவில்லை; அந்தப் பிள்ளைகள் வேலையில் சேரும் வரை பெற்றோரின் கடமை தொடர வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்களும் கவிஞர்களும் ஒன்றாக அமர்ந்து பாடல் கம்போஸிங் செய்த அந்தக் கால பாணி போல, இந்தப் படத்துக்கு கவிஞர்கள் புலமைப்பித்தன், முத்துலிங்கம் இசையமைப்பாளர் செüந்தர்யன் ஆகியோர் ஒன்று கூடி பாடல் கம்போஸிங் செய்துள்ளனர்.

-----------------------------------------------------------------------------------------------

நானா படேகர், அர்ஜுன், ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ்பாபு, கார்த்தி, சூர்யா, விஜய் ஆகியோருடன் நடித்திருந்தாலும் தனக்கு ஏற்ற பொருத்தமான அதே சமயம் ராசியான ஜோடி கார்த்திதான் என்கிறார் காஜல் அகர்வால்.

--------------------------------------------------------------------------------------

"சுந்தரபாண்டியன்' படத்துக்குக் கிடைத்துள்ள நல்ல வரவேற்பும் "கும்கி' படத்துக்கான எதிர்பார்ப்பும் லட்சுமி மேனனுக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து அவரைப் பற்றிய கிசுகிசுக்களும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன. தன்னுடைய முகத்தில் உள்ள சிறிய தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அகற்றியிருக்கிறார் என்று செய்திகள் வர, "அந்த தழும்பு சிறு வயதிலிருந்தே உள்ளது; அதனால் என் அழகுக்கு எந்த பாதிப்பும் இல்லை; இதுவரை அந்தத் தழும்பைப் பார்த்தவர்கள் எந்த நெகட்டிவ் கமெண்ட்டையும் கொடுத்ததில்லை; அதனால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எந்த அவசியமும் இல்லை' எனக் கூறியிருக்கிறார் லட்சுமி மேனன்.

---------------------------------------------------------------------------------------------

"மாற்றான்' படம் தெலுங்கில் "பிரதர்ஸ்' என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தில் விமலன், அகிலன் என ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சூர்யா. இரு கதாபாத்திரங்களுக்கும் தமிழில் சூர்யாவே சொந்தக் குரலில் வித்தியாசம் காட்டி பேசியிருக்கிறார். தெலுங்கு "பிரதர்ஸ்' படத்தில் விமலன் கதாபாத்திரத்துக்கு சூர்யாவே தெலுங்கில் டப்பிங் பேச, அகிலன் கதாபாத்திரத்துக்கு சூர்யாவின் பிரதர் கார்த்தி டப்பிங் பேசியுள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------

"தமிழ்ப் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதனின் புதிய படம் "ரெண்டாவது படம்'. இதில் இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் அவர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கிளாமராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கேட்டால்... ""இந்தப் படத்தில் எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன். எத்தனை படங்களில்தான் குடும்பப் பெண்ணாகவே நடித்துக் கொண்டிருக்க முடியும். அதனால்தான் கிளாமராக நடித்திருக்கிறேன். ஏன் நான் கிளாமராக நடிக்கக் கூடாதா?'' என்கிறார்.

--------------------------------------------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT