தினமணி கதிர்

அரியக்குடியின் அரிய சிலேடை

உங்களுக்காக ஸ்பெஷலாகக் காப்பி தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிடுங்கள்

முருகேசன்

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் சிறந்த சங்கீத வித்வான் மட்டுமல்ல, சிறந்த சிலேடை அறிவு உள்ளவர் கூட
 ஓர் அன்பர், ""உங்களுக்காக ஸ்பெஷலாகக் காப்பி தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிடுங்கள்'' என்றார். அரியக்குடி ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, ""இது காப்பி இல்லை'' என்றார். வந்தவர் முகத்தில் ஏமாற்றம். ""இது காப்பி இல்லை; அசல்'' என்றார் அரியக்குடி.
 
 
 
 ஒருசமயம் ரயில் நிலையம் சென்று வந்த சிஷ்யர் அரியக்குடியிடம், ""அப்பர் பெர்த்துதான் இருக்காம்'' என்றார். உடனே அவர், ""ஏன் சுந்தரரர் பெர்த் இல்லையா?'' என்றார்.
 

 ஒரு சமயம் சபாக்காரர்களுக்குள் வாக்குவாதம். ""என்ன சண்டை?'' என்று கேட்டார் அரியக்குடி.
 ""எங்களுக்குள் பதினைந்தாயிரம் இருக்கும்'' என்றனர் அவர்கள். உடனே அரியக்குடி, ""அப்படியா? ஆளுக்கு ஐயாயிரம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.
 அவினாசி முருகேசன், காரமடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

ஆத்மார்த்தம்... நிவேதா தாமஸ்!

அசத்தும் சாம் கரண்! சிஎஸ்கே வாழ்த்து!

ஜம்முவில் ஆக.30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!

SCROLL FOR NEXT