வாருங்கள் தெரிந்து கொள்வோம்
சுவிட்சர்லாந்தில் சாக்லேட் ரயில் என்று ஒரு ரயிலுக்கு பெயர். சாக்லேட் தயாரிக்கும் ஊருக்கு இந்த ரயில் செல்வதால் அப்பெயர் வந்தது.
- சுவிட்சர்லாந்தில் சாக்லேட் ரயில் என்று ஒரு ரயிலுக்கு பெயர். சாக்லேட் தயாரிக்கும் ஊருக்கு இந்த ரயில் செல்வதால் அப்பெயர் வந்தது.
- கோலார் தங்கச் சுரங்கம் ஆங்கிலேயர் வசம் இருந்தபோது அதில் வேலை செய்த பலருக்கும் ஓரளவு ஆங்கிலம் தெரியும். எனவே, அச்சுரங்கத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்திற்கு "லிட்டில் இங்கிலீஷ்' என்றே பெயர் வந்தது.
- தற்போது நாம் உண்ணும் பிரியாணி தமிழ்நாட்டில் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. "மதுரைக் காஞ்சி' என்னும் நூலில் இது, " ஊன்சோறு' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.