முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி... 

நோயாளி: ராத்திரி எனக்குத் தூக்கமே வர மாட்டேங்குது.டாக்டர்: நல்லது... எங்க வீட்டுக்கு நைட் வாட்ச் மேனா வந்திரு

Updated On : 3 செப்டம்பர், 2018 at 1:02 PM
பகிர்:

• நோயாளி: ராத்திரி எனக்குத் தூக்கமே வர மாட்டேங்குது.
டாக்டர்: நல்லது... எங்க வீட்டுக்கு நைட் வாட்ச் மேனா வந்திரு
டி.மோகன்தாஸ், நாகர்கோவில்.

• வந்தவர்: டாக்டர் தூக்கக் கலக்கத்துல கொசு வாய் உள்ளே போய்டுத்து
டாக்டர்: தூங்கும்போது எப்படிங்க கொசுவால பறக்க முடியும்.
வி.பார்த்தசாரதி, சென்னை-5

• "நாம் இதுக்கு முன்னாடி இந்த ஹோட்டலுக்கு வந்ததில்லை. இங்க இட்லி சாஃப்ட்டா இருக்குமாம்''
"சாப்பிட்டா எப்பிடிப்பா இட்லி இருக்கும்?''
க.சங்கர், கோபிசெட்டிபாளையம்.

Advertisement

• "பக்கத்து வீட்டுக்காரர் இறந்தப்ப செமக் கூட்டம். வந்தவங்க எல்லாம் தேம்பி தேம்பி அழுதாங்க''
"அவர் அவ்வளவு நல்லவரா?''
"அடச்சீ... அவங்களெல்லாம் அவருக்கு கடன் தந்தவங்களாம்''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.