முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி... 

""கட்சி தாவி வர்ற அந்த  தலைவரை வரவேற்க இப்படியா பேனர் வைக்கணும்?''""எப்படி?''"" பாசமிகு பச்சோந்தியே...  வருக வருகன்னு தான்''

தினமணி கதிர்

சிரி... சிரி... 

""கட்சி தாவி வர்ற அந்த  தலைவரை வரவேற்க இப்படியா பேனர் வைக்கணும்?''""எப்படி?''"" பாசமிகு பச்சோந்தியே...  வருக வருகன்னு தான்''

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:


""கட்சி தாவி வர்ற அந்த  தலைவரை வரவேற்க இப்படியா பேனர் வைக்கணும்?''
""எப்படி?''
"" பாசமிகு பச்சோந்தியே...  வருக வருகன்னு தான்''

""எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது''
""முதல்ல நம்ம கட்சியில இருக்கிற கோஷ்டிகளோட கூட்டணி வைப்போம் தலைவரே''

பொ. பாலாஜிகணேஷ்,  கோவிலாம்பூண்டி.


"" ஆ  காட்டுங்க''
""எதுக்கு டாக்டர்?''
""சும்மா லட்டு ஒண்ணு போடலாமான்னு தான்''

 - பர்வதவர்த்தினி, பம்மல்.


""குற்றவாளிகள்கிட்ட கெடுபிடி காட்டாமல், விட்டுப் பிடித்து நடந்துக்கணும்னு  சிறைக் காவலர்கள் கிட்ட அட்வைஸ் பண்ணினது தப்பா போச்சு !''
""என்னாச்சு சார்?''
""கைதிகள் எல்லாரையும் விட்டுட்டேன், ஆனா பிடிக்க முடியலை சார்'னு ஒரு காவலர், என்  காலைப் பிடிச்சுக்  கெஞ்சுறாரே''

-வி. ரேவதி, தஞ்சை.

முழு கட்டுரையைப் படிக்க →