தினமணி கதிர்

பத்து ரூபாய் மருத்துவர்

ஜெ


மருத்துவத்தை வணிகமாக பார்ப்பவர்கள் மத்தியில் அதனை சேவையாக பார்க்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் டாக்டர் நூரி பர்வீன். இவரை 10 ரூபாய் மருத்துவர் என்றே அழைக்கிறார்கள்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் மருத்துவ சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

எப்படி இந்த சேவை மனப்பான்மை வந்தது என்று கேட்டதற்கு பர்வீன் சொல்கிறார்:

""விஜயவாடாவில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். கடப்பாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றேன். மருத்துவத்தை மக்களுக்கு சேவையாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

தனியார் மருத்துவர்கள் சிகிச்சைக்கு ரூ.200 வரை வசூலிக்கிறார்கள். இலவசம் என்றால் மக்கள் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார்கள் என்பதால் குறைந்த கட்டணமாக 10 ரூபாய் மட்டும் வசூலிக்கிறேன்.

விஜயவாடாவில் உள்ள எனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் தான் இந்த கிளினிக்கைத் தொடங்கினேன். ஆனால் எனது நடவடிக்கை மற்றும் பெயரளவு கட்டணம் வசூலிக்க நான் எடுத்த முடிவு பற்றி அறிந்ததும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து என்னை ஆசீர்வதித்தார்கள்.

எனது உத்வேகம் எனது பெற்றோரிடமிருந்தும் அவர் வளர்க்கப்பட்ட விதத்திலிருந்தும் வருகிறது. எனது பெற்றோர் சமூகச் சேவையின் உணர்வை எனக்குள் புகுத்தினர்.

சமூகத்தில் பின் தங்கிய ஏழைகள், பண வசதி இல்லாதவர்களுக்கு எனது மருத்துவம் பயன்படுகிறது.

தற்போது கிளினிக்கில் ஓர் ஆய்வகம், மூன்று படுக்கைகள் மற்றும் ஒரு மருந்தகம் உள்ளது. மேலும் ஒரு வெளிநோயாளிகள் அறையும் உள்ளது. இதுவே இரவு என் படுக்கையும் கூட.

காரணம் அவசர சிகிச்சை பெற இரவினில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்காக இங்கேயே தங்கிவிடுவேன்'' என்கிறார்.

தனது தாத்தாவின் நினைவாக "நூர் நற்பணி மன்றத்தையும்' தொடங்கியுள்ள இவர், இதன் கீழ், கொவைட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொது முடக்கத்தின் போது ஏழைகளுக்கு ஒரு சமூக உணவுத் திட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT