திரைக் கதிர்
"சகுந்தலை' படத்தில் தனது கேரக்டர் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராணப் படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறாராம் சமந்தா.
தினமணி கதிர்திரைக் கதிர்
"சகுந்தலை' படத்தில் தனது கேரக்டர் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராணப் படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறாராம் சமந்தா.
"சகுந்தலை' படத்தில் தனது கேரக்டர் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராணப் படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறாராம் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக தேவ் மோகன் நடிக்கிறார்.
நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜவாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூக வலைதள கமெண்ட்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு, "இப்போ நான் என்ன நினைக்கிறேன்?' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு, "சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே' என்று சதீஷ் கமெண்ட் அடித்தார். அதற்குப் பதிலளித்த பிரியா, சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு, "அப்படிச் சொல்லாதீங்க கோபால்' என்று பதிலளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற "வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஐபிஎல் அணியினர் நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய 3 பேரும் நடனமாடி விடியோ வெளியிட்டுள்ளனர். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"வலிமை' படத்தில் இடம்பெறும் ஒரு சேசிங் காட்சியில் அஜித் ஒரு பேருந்தை ஓட்டி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இது "வலிமை' படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கும் எனவும், இந்தக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுவார்கள் என்றும் சொல்கிறது படக்குழு.
தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா மட்டுமே தனி விமானத்தைப் பயன்படுத்தி வருகிறார். நயன்தாரா பாணியில் தமன்னாவும் தனி விமானத்தில் பறந்தார். ஹைதராபாத்தில் நடக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானத்தில் வந்துள்ளார்.
அல்லு சிரிஷின் முதல் ஹிந்திப் பாடல் "விலாத்தி ஷராப்' யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர் அண்மையில் முதன்முறையாக இந்தி மொழியில் சிங்கிள் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டார். "விலாத்தி ஷராப்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல், குறுகிய காலத்தில் யூ டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் படத்துக்கு "பார்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் ரெஜினா கசாண்ட்ரா, புதுமுகம் ஸ்டெஃபி பட்டேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார். அறிவழகன் எழுதி இயக்குகிறார்.
லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் "மதராசப்பட்டினம்' , "ஐ', "2.0' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். லண்டனில் வசித்து வரும் எமி தன் செல்ல மகன் ஆண்ட்ரியாஸ் கியூட்டாக பியானோ வாசிக்கும் அழகான விடியோவை ரசித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.