முகப்பு
தினமணி கதிர்

என் வாழ்க்கையே செய்தி!

மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் கொள்கையைப் போற்றும் வகையில் ரூபாய் 500 மதிப்புள்ள நாணயத்தை பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் வெளியிட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:


மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் கொள்கையைப் போற்றும் வகையில் ரூபாய் 500 மதிப்புள்ள நாணயத்தை பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் வெளியிட்டார்.

தங்கம் மற்றும் வெள்ளியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நாணயத்தில் இந்தியாவின் தேசிய மலரான தாமரையின் வடிவமும், "என் வாழ்க்கையே எனது செய்தி' என்ற மகாத்மா காந்தியின் வாசகமும் இடம் பெற்றுள்ளன. நாணயத்தின் மறுபுறம் பிரிட்டிஷ் அரசியின் படம் இடம் பெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவு நாணயத்தை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் கொள்கையைப் போற்றும் வகையில் ஐந்து பவுண்டு மதிப்பு கொண்ட இந்த நாணயத்தை பிரிட்டனின் நிதி அமைச்சர் ரிஷிசுனக் வெளியிட்டார்.

நாணயத்தை வெளியிட்ட பிரிட்டனின் அமைச்சர் கூறுகையில், ""உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை தனது கொள்கையால் ஈர்த்த மிகப்பெரும் தலைவருக்கு பொருத்தமான கௌரவம் இந்த நாணயம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.