தினமணி கதிர்

கவனம்  ஈர்த்த  கேரள  போலீஸ்!

கண்ணம்மா பாரதி

அனைத்து மாநிலங்களின் காவல்துறை செய்யாத ஒன்றை கேரளா போலீஸ் வெற்றிகரமாகச் செய்திருக்கிறது.

"நாங்களும் ஹீரோதான்' என்று கேரள போலீஸ் விளம்பரப் படம் ஒன்றை ஆக்ஷன், திரில் கலந்து தயாரித்து சமீபத்தில் வெளியிட... தற்போது வேகமாக அது வைரலாகி வருவதோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"ஒரு குடையின் கீழ் போலீசின் சேவைகள்' என்பதற்காக செயலி ஒன்றை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக இந்த விளம்பரப் படத்தை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. கடத்தி வந்தவனை வில்லன் துப்பாக்கியால் சுட, புல்லட் ஸ்லோ மோஷனில் பாய்ந்து வர, பைக்கில் பயணித்துவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாய்ந்து வரும் குண்டை விரல்களால் பிடித்து கடத்தப்பட்டவனைக் காப்பாற்றுகிறார். வில்லனுக்கு குத்து விடுகிறார். இந்த விளம்பர படத்தில் நடித்திருப்பவர்கள் நிஜ போலீஸ்காரர்கள்.

இந்த விளம்பரம் ஒரு புறம் வைரலாகிக் கொண்டிருக்க, மறுபுறம் கரோனா இரண்டாம் பரவல் தொடர்பான விழிப்புணர்வுக்காக முகக் கவசம், சமூக இடைவெளியின் முக்கியத்துவம், கைகளை சோப்பால் கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்த "என்ஜாய் எஞ்சாமி' புகழ் "குக்கூ குக்கூ' பாடல் மெட்டில் கரோனா விழிப்புணர்வுச் செய்திகளை சொல்லும் காணொளியும் வைரலாகியுள்ளது.

சர்வதேச வலைதளங்களில் இந்தக் காணொளி பகிரப்பட்டு லண்டன் வரை சென்றுள்ளது. பொது மக்களைக் குறிப்பாக இளைய தலைமுறையைக்கவரும் விதத்தில் கரோனா விழிப்புணர்வு பாடல் அமைய வேண்டும் என்பதற்காக இப்போதை ஹிட்டான "குக்கூ குக்கூ'வைத் தெரிவு செய்துள்ளார்கள். இந்தப்பாடலில் ஐந்து பெண் போலீசுடன், நான்கு ஆண் போலீசார் முகக் கவசம் அணிந்து சீருடையில் பாடிநடித்துள்ளனர்.

காணொளி தயாரிப்பு பாடல், நடிப்பு, படப்பிடிப்பு இயக்கம் அனைத்தையும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்துக் கொள்ள, எடிட்டிங் மட்டும் வெளியே செய்து முடித்திருக்கிறார்கள். விழிப்புணர்வு காணொளி என்றாலும், திரைப்படங்களில் நடிக்க முடியவில்லையே என்று ஏங்கிய காவலர்கள்இந்தக் காணொளி மூலம் தங்கள் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT