தினமணி கதிர்

ஏரியில்  மிதக்கும்  தியேட்டர்!

ஆ. கோ​லப்​பன்

உலகிலேயே முதல் முறையாக காஷ்மீரின் புகழ் பெற்ற தால் ஏரியில் மிதக்கும் சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மாநில சுற்றுலாத் துறையும், ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் இளைஞர் நலத்திட்டம் இணைந்து, தால் ஏரியில் மிதக்கும் சினிமா தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஏரியில் மிதக்கும் தியேட்டர் திறக்கப்படுவது முதல் முயற்சியாகும்.

தால் ஏரியில் நிலா வெளிச்சத்தில் ஷிகாரா படகில் மிதந்தபடி, சினிமாவைக் கண்டுகளிக்கலாம். பெரு நகரங்களில் கார்களில் அமர்ந்தபடி டிரைவ் இன் தியேட்டர்களில் படம் பார்ப்பது போல, காஷ்மீரில் படகில் மிதந்தபடி படம் பார்ப்பது புது அனுபவமாக இருக்கும்.

இதில் முதல் திரைப்படமாக 1964இல் காஷ்மீரில் எடுக்கப்பட்ட "காஷ்மீர் கி காளி' என்ற பாலிவுட் திரைப்படம் திரையிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT