தினமணி கதிர்

சிரி... சிரி...

DIN

""திடீர்னு வேலைக்காரியை நிறுத்திட்டியே? இப்ப வீட்டு வேலைகளை யார் செய்யுறது?''
""உங்க வொர்க் ஃபிரம் ஹோம்ல... நம்ம வீட்டு வேலைகளையும் சேர்த்துக்குங்க''

அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

ஆசிரியர்: எப்பவும் பரீட்சையிலே சைபர் மார்க்தானே வாங்குவே... இப்ப எப்படி 20 மார்க் வாங்கினே?
மாணவன்: அதான் சார் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. பேப்பரில் எதுவுமே எழுதாமல் எப்படி 20 மார்க் போட்டீங்க?''


""உங்க ஆபீஸ் மேனேஜர் வித்தியாசமானவரா... எப்படி?''
""ஆபீசுல யார் தூங்காமல் வேலை செய்யுறாங்களோ, அவுங்களுக்கு சாயந்திரம் டீ, பஜ்ஜி வாங்கித் தருவாரு''

கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.



""சுவாமி நான் நினைச்சதெல்லாம் நடக்குறதுக்கு என்ன செய்யணும்?''
""நடக்குறதாகப் பார்த்து நினைச்சிக்குங்க... போதும்''


சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

""நான் சொல்ற பொண்ணு, இருக்கிற இடமே தெரியாது சார்!''
""அப்புறம் எப்படி தரகரே பொண்ணைப் பார்க்கிறது?''

""படுத்த படுக்கையா கிடக்கிற உன் மாமியார் காதுல என்னடீ சொன்னே?''
""திருப்பதி லட்டு'ன்னு 3-தடவை சொன்னேன்; லட்டுன்னா அவுங்க உயிரை விட்டுடுவாங்க டீ''

-வி. ரேவதி,
தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT