முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.  

Updated On : 26 நவம்பர், 2022 at 10:28 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:27 PM


முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "மாமன்னன்' படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது படமாக "வாழை' என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.


அல்லு அர்ஜூனின் "புஷ்பா'வில் சமந்தா ஆடிய "ஊ சொல்றியா மாமா' மாஸ் ஹிட் பாடல். அதைப் போல, இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா அதில் ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறார். 45 ப்ளஸ் வயதை நெருங்கும் மலைக்கா, இன்னமும் இளமை மிஸ் ஆகாமல், ஃபிட்னஸாக உடம்பை வைத்திருப்பது பாலிவுட்டே வியக்கும் விஷயமாகும். புஷ்பா 2 மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வருகிறார் மலைக்கா!


சிவாஜி குடும்பத்திலிருந்து விக்ரம்பிரபு, துஷ்யந்த் என சிலர் சினிமாவிற்கு வந்துவிட்டனர். இந்தக் குடும்பத்திலிருந்து மேலும் இரண்டு வாரிசுகள் வரப்போகிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது என்கிறார்கள். ராம்குமாரின் மகன் சினிமாவில் நுழைவதற்கான எல்லா பயிற்சிகளையும் முடித்து விட்டார் பெயர் மாற்றம் செய்து பெயருக்கு பின்னால் கணேசன் என்று முடிவதாக வைத்திருக்கிறார்கள்.

Advertisement


நடிகர் ஜெய்க்கு வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவரது பெரியப்பா இசையமைப்பாளர் தேவா இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து விட்டார். ஏராளமான காதல் தோல்விகளை சந்தித்த பிறகு ஜெய்யும் இந்த ஏற்பாட்டுக்கு ஓகே சொல்லிவிட்டார். சமீபத்தில் டிவி நடிகை வரைக்கும் காதல் வந்து பிரேக்அப் ஆனதால் வீட்டில் கெடுபிடியாய் அவரை கல்யாண முடிவிற்குள் கொண்டு வந்து விட்டார்கள்.


வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர், காயத்ரி, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கிய அமேசான் ஒரிஜினல் தொடர் வதந்தி ஸ்ட்ரீமிங் வெளியீட்டில் வெளியாக உள்ளது. இதன் மூலம் வெப் சீரிஸில் எஸ்.ஜே. சூர்யா தனது அறிமுகத்தை தொடங்குகிறார். வெலோனி என்ற பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனாவும் இந்தத் தொடரில் முதல் முதலாக அறிமுகமாகிறார், லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.