முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

"" நீ வைச்ச புதினா சட்னி பிரமாதம் போ... எல்லாத்தையும் ஊத்தி இட்லிக்கு நானே தொட்டு சாப்பிட்டுட்டேன்!''"" அடப்பாவி மனுஷா!  அது கைக்கு வைக்க அரைத்து வைத்திருந்த மருதாணி இலைய்யா!''

தினமணி கதிர்

சிரி... சிரி...

"" நீ வைச்ச புதினா சட்னி பிரமாதம் போ... எல்லாத்தையும் ஊத்தி இட்லிக்கு நானே தொட்டு சாப்பிட்டுட்டேன்!''"" அடப்பாவி மனுஷா!  அது கைக்கு வைக்க அரைத்து வைத்திருந்த மருதாணி இலைய்யா!''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

"" நீ வைச்ச புதினா சட்னி பிரமாதம் போ... 
எல்லாத்தையும் ஊத்தி இட்லிக்கு நானே தொட்டு சாப்பிட்டுட்டேன்!''
"" அடப்பாவி மனுஷா!  அது கைக்கு வைக்க அரைத்து வைத்திருந்த மருதாணி இலைய்யா!''

-  எம். ஆர். பாலசுப்பிரமணியம்,  
பள்ளிப்பட்டு. 

""ஏம்பா...சர்வர்.. பூரியில் ஸ்பெஷலுக்கும் , சாதாவுக்கும்  என்ன  வித்தியாசம்?''
""போன வாரம்  செஞ்சது சாதா; இன்னிக்கி  செஞ்சது ஸ்பெஷல்...உங்களுக்கு  எது வேணும்?''

- அ.செந்தில்குமார்,  
சூலூர். 

""அந்தப் பாம்பாட்டி பாவம். ஏன் அழறாரு''
""அவரோட பாம்பு படம் எடுக்காம சீரியல் எடுக்குதாம்''

-தீபிகா சாரதி,
சென்னை.

""எதுக்கு உன் புருஷன் செல்போனை போட்டு உடைச்சே!''
""அவரோட செல்போனில் என் நம்பரை போட்டு அனகோண்டான்னு பதிவு பண்ணியிருக்காரு''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""ஏன் எல்லோரையும் ஆபிசு வந்தே, வேலை பார்க்கச் சொல்லிட்டாங்க''
""வீட்டுல இருந்தபடி ரெண்டு, மூணு கம்பெனியில வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்..''

-எஸ்.மோகன்,
கோவில்பட்டி.

""உங்க மனைவியின் கோபத்தை எப்படி மடைமாற்றம் செய்வீங்க..?''
""என் தலையைக் கொடுத்துத்தான்!''

-கு.அருணாசலம்,
தென்காசி.

முழு கட்டுரையைப் படிக்க →