முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

"மெளனம் பேசியதே'வை கணக்கில் வைத்தால் சினிமாவில் 20 ஆண்டுகள் கொண்டாடுகிறார் த்ரிஷா.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 4:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

"மெளனம் பேசியதே'வை கணக்கில் வைத்தால் சினிமாவில் 20 ஆண்டுகள் கொண்டாடுகிறார் த்ரிஷா. இதற்காக அவரின் நண்பர்களும், சக நடிகர்களும் இணைந்து பாராட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா முதற்கொண்டு பலரும் ஒத்துழைப்பு தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80-களின் கதாநாயக - நாயகிகளின் சந்திப்பு மாதிரி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்கள். சென்னையில் விழா இல்லை. கோவாவில்!

"பத்து தல' ஷெட்யூல் வேகம் எடுத்து விட்டது. பெல்லாரியிலும் ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டு வந்துவிட்டனர். அங்கே சிம்புவின் நேரம் தவறாமைப் பற்றித்தான் கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்துக்கு சரியான நேரத்துக்கு ஆஜர் ஆகியிருக்கிறார். பெல்லாரி ஷெட்யூலை முடித்துவிட்டு, உடனடியாக அடுத்தடுத்து படங்களுக்காக தீவீர யோசனையில் இருக்கிறார். சிம்புவின் இந்த வேகத்துக்குக் காரணம், தந்தையின் அட்வைஸ் எனவும், "மாநாடு' படத்தின் மெகா ஹிட் ஒரேடியாக சிம்புவை மாற்றிவிட்டது எனவும் யூனிட்டுகளில் பேசிக் கொள்கிறார்கள்.

முன்பு இயக்குநர் செல்வராகவன் "ஒயிட் எலிபென்ட்' என்ற சினிமா நிறுவனத்தை ஆரம்பித்தார். அதில் அவர், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, யுவன்ஷங்கர் ராஜா என மூவரும் இணைந்திருந்தனர். அதைப் போல இப்போது அனிருத், சிவகார்த்திகேயன் இருவரும் சேர்ந்து ஒரு பட நிறுவனத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள். அதன் மூலம் ஆண்டுக்கு ஒரு படம் செய்யப் போகிறார்கள். கமெர்ஷியலாக இல்லாமல் நல்ல கதை அமைப்புடன் தயாரிக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisement

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் மீண்டும் பட இயக்குதலுக்கு வந்திருக்கிறார். மஞ்சு வாரியார், யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் இப்படத்தின் பெயர் "சென்டிமீட்டர்'. கேமிராவையும் சந்தோஷ் சிவனே கவனித்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்றுபேர் இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சந்தோஷ்சிவன் விரும்பியதற்கிணங்க மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.