முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி... 

"என்னங்க? நகையை அடமானம் வைக்கச் சொன்னால், விற்கச் சொல்றீங்க?''""என்ன செய்கிறது? நகைக்கு வீட்டுலேயும் பாதுகாப்பு இல்லை. வங்கியிலும் பாதுகாப்பு இல்லையே?''

Updated On : 10 செப்டம்பர், 2022 at 9:58 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:47 PM

""என் மகள் வாங்கியிருக்கிற 98%  மார்க்கை பார்த்தா மெடிக்கல் சீட் நிச்சயம் கிடைக்கமுன்னு நினைக்கறேன்!''
"" கண்டிப்பாக கிடைக்கும்!''
""இப்ப ஒன்றாம் வகுப்பில் வாங்கியிருக்கிற மார்க்கை தொடர்ந்து அவள் வாங்கணுமே?''

-எ.என்.எஸ்.மணியன், 
அந்தியூர்.

"என்னங்க? நகையை அடமானம் வைக்கச் சொன்னால், விற்கச் சொல்றீங்க?''
""என்ன செய்கிறது? நகைக்கு வீட்டுலேயும் பாதுகாப்பு இல்லை. வங்கியிலும் பாதுகாப்பு இல்லையே?''

Advertisement


-அ.சுஹைல் ரஹ்மான்,
 திருச்சி.

""என்னோட ஏ.டி.எம். கார்டும், சிம் கார்டும் ஒண்ணுதான்!''
""எப்படி?''
""ரெண்டுலேயும் எப்பவும் பேலன்ஸ் இருக்காது?''


-தீபிகா சாரதி, 
சென்னை.

""ரமா! உன் வீட்டு வேலைக்காரி மேலே ஒரு கண் வச்சிக்கோ!''
""ஏன்? அப்படி சொல்றே?''
""நீ வீட்டுல இல்லாதபோது,  வேலைக்காரி ஹாலில் டி.வி. சீரியல் பார்க்கிறா? உன் கணவர் சமையல் அறையில் வேலை செய்யறாரு?''


-கு.அருணாசலம், 
தென்காசி.

""என்ன சாமியாரை பார்க்க இத்தனைக் கூட்டம்?''
""நமக்கு.. என்ன சீரியல் 
பிடிக்குங்கிறத கூட சரியா 
சொல்றாராம்''

-ஆர்.சுந்தரராஜன், 
சிதம்பரம்.


""கம்பி மேல நடந்து காட்டறதாச் சொல்லி பந்தயம் கட்டிட்டு, அந்த ஆள் என்னை ஏமாத்திட்டான்''
""எப்படி?''
""கம்பியை கீழே போட்டுட்டு அது மேலே நடந்து காட்டினான்''

-ஆர்.மகாதேவன், 
திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.