தினமணி கதிர்

அப்படீங்களா!

DIN

புதிய பயனாளர்களைக்  கவர புதிய சேவைகளை வாட்ஸ் ஆஃப் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. 

புதிய கைப்பேசி,  கணினியில் வாட்ஸ் ஆஃப் கணக்கில் நுழைய,  தற்போது ஒடிபி அல்லது 6 இலக்க எண்ணைப் பதிவிட வேண்டும்.  வாட்ஸ் ஆஃப் பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைக்க,  இந்த 2 வகை பாதுகாப்பை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.  இதற்கு மாற்றாக புதிய பாஸ்கோட் என்ற சேவையை வாட்ஸ்  ஆஃப் அறிமுகம் செய்து வருகிறது. 

மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களும் பாஸ்கோடுக்கு மாறி வருகின்றன. பாடஸ்கோட் மூலம் கைப்பேசியில் உள்ள கைரேகைப் பதிவு, முகப்பதிவு ஆகியவற்றை வைத்து வாட்ஸ் ஆஃப் கணக்கை அங்கீகரித்து உள்ளே நுழையலாம்.

கைப்பேசியில் உள்ளே நுழைய பயன்படுத்தப்படும் கைரேகை, முகப் பதிவை வைத்தே வாட்ஸ் ஆஃப் கணக்கையும் அங்கீகரிக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். புதிய கைப்பேசி, கணினியில் வாட்ஸ் ஆஃப் கணக்கில் நுழைய கைரேகை, முகப் பதிவைப் பயன்படுத்தலாம். இந்தச் சேவையை வாட்ஸ்ஆஃப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT