முகப்பு
தினமணி கதிர்

சிரி சிரி

நகைக்கடையில் கொள்ளை அடிச்சி எப்படி மாட்டுனே..?

Updated On : 23 ஜூன் 2024, 12:00 am IST
பகிர்:

'நகைக்கடையில் கொள்ளை அடிச்சி எப்படி மாட்டுனே..?'

'எல்லாம் ஒரிஜினல் நகையான்னு செக் பண்றதுக்குள்ளே விடிஞ்சி போச்சு.. கடையைத் திறந்துட்டாங்க சார்..'



Advertisement

Advertisement

'நகைக்கடையில் ரூ.1.90 லட்சத்துக்கு நகைகளைக் கொள்ளையடிச்சது ஏன்டா..?'

'ரெண்டு லட்சத்துக்கு மேல் எடுத்தா பான் கார்டு வேணுமே சார்...'

-அ.ரியாஸ், சேலம்.



'உன் காதலி வீட்டிலேயே திருடினியாமே... ஏன்?'

'ஐயா.. எங்கே பணத்தை விட்டோமோ அங்கேதானே எடுக்க முடியுமே..'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.



'ஏம்பா.. கொலையாளி எப்படி இருந்தான்னு சொல்ல முடியுமா?'

'கையில் கத்தியோடு இருந்தான் சார்...'

-அ.செந்தில்குமார், சூலூர்.



'நீ செஞ்ச குற்றத்துக்கு தண்டனை என்ன தெரியுமா?'

'நாலஞ்சு செக்ஷன் இருக்கு. எதை சொல்லட்டும் யுவர் ஆனர்..'

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'நீங்களே முகமூடி போட்டுகிட்டு உங்க மனைவிகிட்டே பணத்தைத் திருடினீங்க?'

'என் மனைவிகிட்டே பணத்தை வாங்க வேறு வழி தெரியலைங்க ஐயா...'



'அந்த ஆளு ஐநூறு ரூபாய் கள்ள நோட்டு அடிச்சதுல எப்படி மாட்டுனாரு?'

'நோட்டுல காந்திக்கு கூலிங் கிளாஸ் போட்டுட்டாராம்...'

-வி.சாரதி டேச்சு, சென்னை.



'காட்டுக்குள்ளே இருக்கிற போலீஸ் அவுட் போஸ்ட்டிலா வேலை பார்க்கறீங்க? அடிக்கடி பாம்பு வரும்ல'

'அதெப்படி வரும். வந்தா பல்லை பிடுங்கிடுவோமுன்னு பயம் இருக்கும்ல அதுக்கு...'

-சம்பத்குமாரி, பொன்மலை.

'ஹலோ தொழிலதிபர் தண்டபாணியா? உங்க மனைவியை நாங்கதான் கடத்தி வச்சிருக்கோம்..?'

'ஹலோ நன்றி புரோ... பத்திரமா வைச்சிக்குங்கோ...'



'கட்டுன மனைவி உடம்புல பொட்டுத் தங்கம் கூட இல்லாம வெச்சிருக்கியே.. உனக்கெல்லாம் எதுக்குய்யா கல்யாணம்...'

'நல்லா நாக்கை பிடிங்குற மாதிரி கேளுங்கண்ணே...'

'உனக்கு அண்ணன்ஒருத்தன் இருக்கான்னு சொன்னியே.. இந்தத் திருடன்தானா அவன்...'



'அடிக்கடி திருடிட்டு வர்றீயே.. உனக்கு வெக்கமா இல்லை...'

'லம்பா ஒரு இடத்தில் திருடிட்டா செட்டில்

ஆகிடுவேன் எஜமான்...'



'ஆட்டோ டிரைவர் உங்களை மாமா, மாமான்னு கூப்பிடுறாரு.. நீங்க கண்டுக்காம இருக்கீங்க? போலீஸ்னா பயம் வேண்டாமா..'

'அவனோட தாய்மாமன்தான்...'



'சட்டைப் பையில் பிளேடு வெச்சிருங்கீங்களே ஏன்...'

'பஸ்ஸில் போகும்போது பிக்பாக்கெட் எவனாது கையைவிட்டா கிழிக்கட்டுமுன்னுதான்..'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.