சூரியன் 
தினமணி கதிர்

வியக்க வைக்கும் விஷயங்கள்...

உலகில் பல விஷயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றில் சில:

கோட்டாறு கோலப்பன்

உலகில் பல விஷயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றில் சில:

சிட்னி ஓபரா ஹவுஸ்

இருபதாம் நூற்றாண்டின் தனித்துவமான கட்டடங்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸ் 1973-இல் கட்டி முடிக்கப்பட்டது.

நியூ சௌத் வேல்ஸ் அரசின் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தையும் இதன் வடிவமைப்பையும் உலகமே வியந்து பார்த்தது. நவீனக் கட்டடக் கலையின் மாபெரும் சாதனையாகவும் புகழப்பட்டது. இதனை டென்மார்க்கைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஜோன் அட்சன் என்பவர் வடிவமைத்தார். இவர் கோபன் ஹேகன் நகரில் 1918-இல் பிறந்தார். இவரது தந்தை கடல்சார் கட்டடக் கலைஞர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜோன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவுக்கும் சென்றார். 1950-இல் தனது சொந்த ஊரான கோபன் ஹேகனுக்கு திரும்பி சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின்னர், கட்டட வடிவமைப்பில் அனுபவம் பெறுவதற்காக அவர் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மேலும், மெக்ஸிகோவின் மாயன் இனத்தவரின் கட்டடக் கலையும் இவரை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் பின்புலத்தை வைத்துகொண்டுதான் ஜோன் தனது கட்டடங்களை வடிவமைத்தார்.

1957-ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக இவரது நிறுவனம் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸை வடிமைக்க நடத்திய போட்டியில் வெற்றி பெற்றது.

2007-இல் இந்தக் கட்டடத்தை யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்தது.

இரும்பு மழை

பூமியில் சூரியனின் வெப்பத்தால் தண்ணீர் ஆவியாகி மேகமாகி, குளிர்ந்து மழையாகப் பொழியும். ஆனால், பூமியில் இருந்து 880 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள கோளில் இரும்பு மழை பொழிகிறது.

அமெரிக்காவின் நாசாவால்அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி, புதிய கோள்களின் படங்களை அனுப்பியுள்ளது. 2016-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட "டைலோஸ் கோள்' என்பது வியாழன் அளவுக்குப் பெரிதானது என்பதோடு, சூரியனுக்கும் அருகிலும் இருக்கிறது. அதனால், மிக வேகமாகச் சூரியனை சுற்றுகிறது. இங்கு ஒரு ஆண்டு என்பது முப்பது மணி நேரம்தான்.

2016, 2018, 2019ஆம் ஆண்டுகளில் ஹப்பிள் தொலைநோக்கி அளித்த தகவல்களின்படி, இந்தக் கோள் குறித்த பல்வேறு விஷயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இதன்ஒரு பக்கம் எப்போதும் சூரியனை நோக்கியே இருக்கும் என்பதால், 1877 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். ஒளிபடாத மறுபுறம் குளிர்ச்சியாக இருக்கும். இதனால், காற்றழுத்த வேறுபாடு ஏற்பட்டு எப்போதும் சூறாவளி வீசிக் கொண்டே இருக்கும்.

இங்குள்ள மேகங்கள் இரும்பால் ஆனவை. இரும்பு ஆவியாகித் திரவ நிலையில் மழையாகப் பொழியும். இப்படியான வித்தியாசமான சூழல் கொண்ட கோள் அறிவியல் ஆர்வம் கொண்டவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

நீர்மூழ்கிக் கப்பல்கள்

ஹாலந்தைச் சேர்ந்த விஞ்ஞானி கார்னெலியஸ் வான்டிரேப்பேன் என்பவருக்கு நீர்முழ்கிக் கப்பலை உருவாக்கும் வாய்ப்பை ஹாலந்து அரசு அளித்தது. அவர் சவாலாக எடுத்துகொண்டு சாதித்தும் காட்டினார். தேம்ஸ் நதியில் பலமுறை இதை வெற்றிக்கரமாக இயக்கினார். ஆனால், நீருக்கு அடியில் நான்கு மீட்டர் ஆழத்தில்தான் அந்தக் கப்பல் இயங்கியது. அதைக் கப்பல் என்பதைவிட படகு என்றே கூறிவிடலாம்.

அதன் வெளிப்புறம் மரத்தினாலும், அதற்கு மேல் க்ரீஸ் தடவிய தோலினாலும் உருவாக்கப்பட்டிருந்தது. உள்ளிருந்து துடுப்புகள் அதன் வெளிப்புறம் மரத்தினாலும் அதற்கு மேல் க்ரீஸ் தடவப்பட்ட தோலினாலும் உருவாக்கப்பட்டிருந்தது.

உள்ளிருந்து துடுப்புகள் வெளியில் வருவதற்கு உள்ளே செல்வதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தத் துடுப்புகளும் தோலினால் அமைக்கப்பட்டிருந்தன.

நாளடைவில் தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றம் அடைய நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து சுவாரசியம் அதிகமானது. 1727-இல் பதினான்கு விதமான நீர்மூழ்கிக் கப்பல் டிசைன்கள் காப்புரிமைக்காக, இங்கிலாந்தில் போட்டியிட்டன. இருந்தாலும், டேவிட் புஷ்னல் என்பவர் உருவாக்கிய, நீர்மூழ்கிக் கப்பல்தான் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. அமெரிக்கப் புரட்சியின்போது, அமெரிக்க ராணுவத்தால் இது பயன்படுத்தப்பட்டது. இந்தக் கப்பலின் பெயர்- ஆமை.

நியூயார்க் துறைமுகத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் தனது கீழ்ப்பகுதியில் வெடிமருந்து நிரப்பிக் கொண்டு எதிர்த்தரப்பு கடற்படையினரை அழிக்கப் பயன்படுத்தப்பட்டது. பெரும்ôபாலான நீர்மூழ்கிக் கப்பல்கள் உருளை வடிவ உடலமைப்பைக் கொண்டதாக இருக்கும். தண்ணீருக்குள் இருந்தபடியே தண்ணீருக்கு மேல்புறம் நடப்பதைக் காணும் பெரிஸ்கோப் கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

நீர்மூழ்கிக் கப்பல்களினால் பல பயன்கள் உண்டு. எதிரிநாட்டு கடற்படைகளை எதிர்கொள்வதற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் மிகவும் வசதியானவை. கடலுக்குக் கீழ் நடத்தப்பட வேண்டிய ஆராய்ச்சிகளுக்கும் ஏற்றவை. கடல் மட்டத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு அடி ஆழத்துக்குத்தான் அவைகளின் கொந்தளிப்பு இருக்கும். எனவே அதற்கும் கீழாக இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மிகவும் பாதுகாப்பானவை.

இவற்றின் சாகசங்களை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலப் படங்கள் வெளியாகியுள்ளன. நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல் நடக்கும்போது, அதில் பயணிப்போர் எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு மூச்சு விடுவதைக் கூட மெதுவாக்கிக் கொள்வது போன்ற முகப் பாவத்தோடு காட்சியளிப்பார்கள். நீரின் கீழ்ப்பகுதியில் ஒலி அலைகள் சிறப்பாகப் பயணம் செய்யும். எனவே, அவர்கள் பேசிக் கொண்டாலே அதை கடலின் மேல்மட்டத்தின் அருகே வரும் பிற கப்பலில் உள்ளவர்களால் கேட்க முடியும்.

நீர்மூழ்கிக் கப்பலின் மீது குண்டு வீசுவதைவிட, அதன் அருகே வீசினாலும் அதன் அதிர்ச்சியே மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT