வாராஹி 
தினமணி கதிர்

தன்னந்தனியே...!

திருச்சி தில்லை நகர் பத்தாவது குறுக்குச் சாலையில் மாலை நேரங்களில் "வாராஹி' எனும் தள்ளுவண்டி பலகாரக் கடையில், இதர சிற்றுண்டிக் கடைகளில் கிடைக்காத உணவு வகைகளைத் தனி நபராகத் தயாரித்து கொடுக்கிறார் முப்பது வயதான திவ்யா பாரதி.

சுதந்திரன்

திருச்சி தில்லை நகர் பத்தாவது குறுக்குச் சாலையில் மாலை நேரங்களில் "வாராஹி' எனும் தள்ளுவண்டி பலகாரக் கடையில், இதர சிற்றுண்டிக் கடைகளில் கிடைக்காத உணவு வகைகளைத் தனி நபராகத் தயாரித்து கொடுக்கிறார் முப்பது வயதான திவ்யா பாரதி.

அவரிடம் பேசியபோது:

'ஒற்றைத் தாய் நான். எனது ஒரே மகன், ஒன்றாம் வகுப்பில் படிக்கிறான். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் எனும் லட்சியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இந்தத் தள்ளுவண்டி கடைக்குப் பக்கத்திலேயே வாடகை வீட்டில் வசிக்கிறேன். வீட்டில் அம்மா, அப்பா, தங்கை, நான், என் மகன் குடியிருக்கிறோம்.

பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். பெண்களுக்கு ஜாக்கெட்டுகளை அலங்காரமாக வடிவமைக்கும் "ஆரி' தையல் வேலை தெரியும். மூன்று பெண்களைப் பணியாள்களாக வைத்து தையல் கடையை நடத்தினேன். தையல் கடை முன் ஒரு சிற்றுண்டிக் கடையையும் போட்டு வகை, வகையான சிற்றுண்டிகளை வித்தியாசமான சுவைகளில் விற்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது, கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தையல் கடையை மூட வேண்டியதாகிவிட்டது.

வீட்டிலேயே தையல் வேலைகளைச் செய்து வந்தேன். எனது அப்பா துணிமணிகளை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று வீடு வீடாக விற்கும் வேலையைச் செய்து வந்தார். கரோனாவால் அவரது வியாபாரமும் பாதித்தது. மகனை வளர்க்க, தையல் வருமானம்தான் கை கொடுத்தது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் மகனைப் பள்ளியில் சேர்த்த பிறகு, சிற்றுண்டிக் கடை தொடங்க முடிவெடுத்தேன். நான்கு சக்கர தள்ளுவண்டியை மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாடகைக்குப் பிடித்தேன்.

தில்லை நகர் பத்தாம் குறுக்குச் சாலையில் மாலை நேர பலகாரங்களை ஜூலை மாதம் முதல் தயாரிக்க ஆரம்பித்தேன். தையல் வேலைகளை காலை முதல் மாலை மூன்று மணி வரை செய்வேன்.

அம்மா மகனைப் பார்த்துக் கொள்வதுடன் கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து தருவார். கேரட், வெங்காயம், முட்டைக்கோஸ்களை வெட்டிக் கொடுப்பார். இவற்றை நான் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு கொண்டு வருவேன். காஸ் அடுப்பு வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும். எனது கடையில் பலவகை காய்கறிகள் போட்டு காய்ச்சும் ஐந்து ரூபாய் சூப்புக்கு நல்ல வரவேற்பு உண்டு. சிற்றுண்டியின் அதிகபட்ச விலை முப்பது ரூபாய் மட்டுமே.

சேலம் தட்டு வடை எனது கடையின் ஸ்பெஷல். இரண்டு தட்டைகளின் இடையே காரட், பீட்ரூட் வெங்காயத் துருவலை வைத்துக் கொடுப்பது வித்தியாசமான சுவையாக இருக்கும். மசாலா பானிபூரியையும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பன்-பட்டர்-ஜாம் வகையறாவும் உண்டு. சுண்டலும் கிடைக்கும். "நொறுக்கு' என்று தட்டை, கார்ன்பிளேக்ஸ் , சுண்டலைச் சிறிதாக நொறுக்கி கூட்டணி உண்டாக்கியும் விற்பதுண்டு. பேபி கார்ன்னுடன் மசாலா சேர்த்துப் பொரித்து சீஸ் சேர்த்தும், உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயாரித்தும் விற்கிறேன்.

வாடிக்கையாளர்கள் என்ன கேட்கிறார்களோ அவற்றை செய்து கொடுப்பேன். நூடுல்ஸ் மட்டும் விற்பதில்லை. "சாஸ்' வகைகளை சிற்றுண்டிகளில் சேர்ப்பதில்லை. கடை மாலை நான்கரை முதல் இரவு எட்டரை வரை திறந்திருக்கும்'' என்கிறார் திவ்யா பாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைது: தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT