'சாந்தா.. இதோட குக்கர் பத்து முறை விசில் அடிச்சாச்சு.. ஸட்வ்வை இன்னும் ஆஃப் பண்ணாம இருக்கே...?'
'இல்லைங்க... உங்களுக்கு காது நல்லா கேட்குதா.. கணக்கு சரியா தெரியுதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன்...'
-நாகலட்சுமி விசாகன், கிழக்கு தாம்பரம்.
'தம்பி... அல்வா வாங்கிட்டீங்க.. மல்லிகைப்பூவும் வாங்கிட்டு போங்க?'
'வீட்டுக்குப் போனா அல்வாவை நான் சாப்பிடுவேன்.. மல்லிப் பூ வைக்கிறதுக்கு இன்னும் ஆள் இல்லைக்கா..?'
'ஏன் தம்பி ஒரு சாமி படம் கூடவா வீட்டில் இல்லை..?'
'அது சரி...'
-பெ.நா.மாறன், மதுரை.
'காலையில் டிபன் பண்ணாமல் இருக்கக் கூடாதுடா..?'
'சரியாகச் சொன்னே.. வாங்கிக் குடுப்பா...?'
'மைசூருபாக்கு, ஜாங்கிரி எல்லாம் இத்தனை மெலிசா இருக்கே...?'
'சார்...இது சாம்பிள் கேட்பவருக்கு கொடுக்க...'
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'வெயில் காலத்துல நிறைய தண்ணீர் குடிங்க?'
'டாக்டர்... நிறைய தண்ணீர் குடிச்சா வெயில் போயிருமா..'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'உன் கணவர் ஹோட்டலிலும் சமையல் ரூமில் சாப்பிடுறாரு.. ஏன்..'
'ஆமாடி.. அவருக்கு வெளியே சாப்பிட்ட ஒத்துக்கறதில்லை.. அதான்...'
-தீபிகா சாரதி, சென்னை.
'நம்ப ராப்பிச்சைக்கு எவ்வளவு கிண்டல் பாரு..?'
'என்ன விஷயம்...'
'பாவமுன்னு நினைத்து சோறு போட்டா..
குக்கரில் இன்னைக்கு சோறு வழியலையா தாயின்னு கேக்கறான்...'
'பூரி என்னப்பா.. சப்பையா இருக்கு..?'
'எவ்வளவு நாளைக்குதான் சார் உப்பலாகவே இருக்கும்...'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
'படத்துக்கு ஏன் 'ஆன்லைன்'னு பேர் வைச்சீங்க..?'
'இப்போதெல்லாம் ஆன்லைன் உணவு, ஆன்லைன் ஷாப்பிங்.. என்று மவுசு கூடுதே.. அதான்...'
'ஏம்பா... சர்வர்.. சாம்பார் வாளியை டேபிளில் வச்சிட்டு போறியே...?'
'நீங்க சட்னி பிரியர்.. இதை தொட மாட்டீங்கன்னு தெரியும் அதான் சார்...'
-பர்வீன் யூனுஸ் சென்னை.
'என்னங்க.. இளநீர் அறுபது ரூபாயா...?'
'ஆமாம்..'
'வெயில் காலம்தான் போயிடுச்சே.. '
'எந்தக் காலமாய் இருந்தாலும், மரத்துல ஏறி பறிக்கணும்ல. அதான்...'
'அந்த ஓட்டலில் ஒண்ணு வாங்கினால் ரெண்டு ஃப்ரீன்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா..? எப்படி..'
'ஆமாம்.. இட்லி வாங்கினால் சட்னி, சாம்பார் ஃப்ரீன்னு சொல்லிட்டாங்க....?'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.