உத்தர பிரதேசத்தில் உள்ள 'துத்வா புலிகள் சரணாலயம்', 'கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயம்', 'கிஷப்பூர் வனவிலங்கு சரணாலயம்' என்ற மூன்று சரணாலயங்களை இணைத்து ஒரு ரயில் சபாரி இயங்குகிறது.
'ஒரு இலக்கு- மூன்று காடுகள்' என்ற அடிப்படையில் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. பிச்சியா என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, மைலானி 107 கி.மீ. பயணித்து மைலானி என்ற இடத்தை 4 மணி 25 நிமிடங்களில் அடைகிறது.
மூன்றும் சரணாலயங்கள் இணைந்து 2,200 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மூன்றிலுமே புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவின் 53 புலிகள் சரணாலயங்களில் இதுவும் ஒன்று. சுமார் 125-க்கும் அதிகமான புலிகள் தற்போது இந்த பகுதியில் உள்ளன.
கட்டானியாகாட் வன விலங்கு சரணாலயம் அருகே நேபாளத்தின் பார்டியா தேசிய பூங்கா உள்ளது. கிஷன்பூர் வன விலங்கு சரணாலயம் மைனானி அருகில் உள்ளது. புலிகள், சிறுத்தைகள்,கருப்பு கரடிகள்,ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம், சதுப்பு நில மான்கள், யானைகள்,காட்டுப் பன்றிகள், வரகு கோழிகள் உள்ளிட்ட 450 -க்கும் அதிகமான பறவைகள், விலங்குகளைபயணித்தபடியே ரசிக்கலாம். கட்டணம் 275 ரூபாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.