சான்டோரினி கிரேக்க தீவு 
தினமணி கதிர்

சான்டோரினி கிரேக்க தீவு

தெற்கு ஏஜியன் கடலில் உள்ள ஒரு கிரேக்க தீவு. பிரதான நிலப்பரப்பிலிருந்து 200 கி.மீ. பயணித்தால் இந்த தீவை அடையலாம்.

DIN

தெற்கு ஏஜியன் கடலில் உள்ள ஒரு கிரேக்க தீவு. பிரதான நிலப்பரப்பிலிருந்து 200 கி.மீ. பயணித்தால் இந்த தீவை அடையலாம்.

ஒரு சிறிய வட்டக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவு. சுமார் 73 கி.மீ. பரப்பளவு கொண்டது. எரிமலை வெடிப்புப் பகுதியில் அமைந்துள்ள பகுதி. சுமார் 3,600 வருடங்களுங்கு முன் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்து வீசப்பட்ட வெள்ளை சாம்பல் படிவு 60 மீ. கனத்திற்கு பரவியுள்ளது.

இவை சார்ந்த தீவுகளில் இப்போதும் நில நடுக்கம் உண்டு. இதற்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டு அசைவதே காரணம் என்கின்றனர்.

எரிமலை கருப்பு மண் சிறப்பான விவசாயத்துக்கு உதவுகிறது. திராட்சைகள், தக்காளி போன்றவை நன்கு செழிக்கின்றன. அறுவடை செய்யும்போது கொள்ளையர் கொள்ளை அடிப்பதுடன் இந்த தீவு விவசாயிகளையும் அடிமையாக்கி விற்றுவிடுவர்.இதனால் வீடிகளைச் சுற்றி கோட்டைகளை கட்டினர்.

ஒயின் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ரஷியாவுக்கு ஏற்றுமதியாகிறது. இங்குள்ள வீடுகள் கண சதுர வீடுகள், வெள்ளையானவை. தேவாலயங்கள் நீல வண்ண குவி மாடங்கள் கொண்டவை. சூரியன் அஸ்தமன நேரத்தில் சூரியன் கடலில் மூழ்குவதை வேறு எங்குமே இவ்வளவு தத்ரூபமாய் காண முடியாது.

இங்குள்ள கட்டடங்களில் அமைக்கப்படும் வளைந்த கூரைகள் ஏஜியன் முழுவதும் வீசும் சக்தி வாய்ந்த காற்றை திசை திருப்புகின்றன. கடற்கரைகள், எரிமலை, கருப்பு மணலை ரசிக்கவே சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவுக்கு வருகை தருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன கண்ணன் அழைக்கிறான்..!

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

கேதார்நாத் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு: மகாராஷ்டிர பக்தர் பலி

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

பொங் அணையில் நீர் திறப்பால் இடிந்து விழுந்த 2 மாடிக் கட்டடம்! | Himachal Pradesh

SCROLL FOR NEXT