தினமணி கதிர்

ஜர்னி பிரேக்..!

இந்திய ரயில்வேயில் பலருக்கும் தெரியாத ஒரு வசதி- 'ஜர்னி பிரேக்'.

எம். அசோக்ராஜா

இந்திய ரயில்வேயில் பலருக்கும் தெரியாத ஒரு வசதி- 'ஜர்னி பிரேக்'.

ஒருவர் ஒரு ரயிலில் 500 கி.மீ.க்கு மேல் ஒரு பயணச் சீட்டில் பயணம் செய்தால், 501 கி.மீ.க்கு அப்பால் வழியில் உள்ள எந்த நிலையத்திலும் இறங்கி,

2 நாள்களுக்குள் எந்தக் கூடுதல் பணமும் தராமல் மீண்டும் பயணத்தைத் தொடரலாம்.

உதாரணத்துக்கு, ஒருவர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அலுவலக நிமித்தமாக ரயில் பயணச் சீட்டு பதிவு செய்துள்ளார். அதே நாளில் அவரை மேலதிகாரி புதுச்சேரி அலுவலகத்துக்குப் போகச் சொல்கிறார். அப்போது பயணி 536-ஆவது கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி புதுச்சேரிக்குச் செல்லலாம்.

அடுத்த நாள் மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து, பயணச் சீட்டில் பயணம் செய்யலாம். அதற்கு பயணம் செய்பவர் விழுப்புரம் ரயில்வே அலுவலரிடம் பயணச் சீட்டைக் காண்பித்து, 'ஜர்னி பிரேக்' என்று குறிப்பு வாங்க வேண்டும்.

ராஜ்தானி, சத்பதி, ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைச்சா் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்- அமலாக்கத் துறை தகவல்

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அலிகா் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி வினோத்சந்திரன் விலகல்

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

பாகிஸ்தான்: மேலும் 2 பேருக்கு போலியோ

SCROLL FOR NEXT