அடிக்கும் வெயிலுக்கு...
உடலில் இருப்பதே தெரியாத அளவுக்கு மென்மையான ஆடை உடுத்தும் உணர்வையும், அழகான தோற்றத்தையும் 'லினன் ஆடைகள்' அளிக்கின்றன.
கே. ஏ.ஜி.
உடலில் இருப்பதே தெரியாத அளவுக்கு மென்மையான ஆடை உடுத்தும் உணர்வையும், அழகான தோற்றத்தையும் 'லினன் ஆடைகள்' அளிக்கின்றன. இது உயர்தர பருத்தி ஆடைகளையும்விட சற்று கூடுதலான மதிப்பு வாய்ந்ததாகும்.
'பாக்ஸ் தாவரம்' என்று அழைக்கப்படும் ஆளி தாவரத்தில் இருந்து பெறப்படும் நாரில் இருந்து லினன் துணிகள் உருவாக்கப்படுகின்றன. 'லினாசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த நார், வட மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆளி நாரில் இருந்து தயாரிக்கப்பட்ட லினன் துணிகளை அக்காலத்திலேயே மக்கள் பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், எகிப்திய நாட்டவர்கள் இதனை அணிந்து வந்துள்ளனர். ஆனால், இந்தியர்கள் பருத்தித் துணிகளின் தனித்துவமான குளிர்ச்சியை உணர்ந்ததால், லினன் நார் துணிகளைவிட பருத்தி ஆடைகளையே அணிந்துவந்தனர்.
வெப்பமான காலநிலைகளில் பருத்தி மிகச்சிறந்த ஆடை என்றாலும் லினன் அதைவிட மெல்லிய நாரிழை கொண்டது. இதனால் எடை குறைந்த துணிகளை விரும்புவோர் லினன் ஆடைகளை சிறந்ததொரு தேர்வாக கருதுகின்றனர். அடிக்கும் வெயிலுக்கு ஏற்ற ஆடை.
பொதுவாக, லினன் துணிகள் அதன் எடையில் 20 சதவீதம் வரை ஈரப்பதத்தை உறிஞ்சி மனித உடல் ஈரமாக உணரப்படாத ஓர் உலர்தன்மையை அளிக்கும். உடலில் தோலில் காணப்படும் பல நுண்ணுயிரிகளைத் தடுத்து, உடலில் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். எனவே, லினன், பருத்தி ஆகிய இரண்டையும் சிறந்த ஆடைகள் என்றே கூறலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.