முகப்பு
தினமணி கதிர்

அழகான கிராமம்!

மேகங்களுக்கு மேலே அமைந்துள்ள மேகாலயாவின் கிராமமான நோங்ஜ்ரோங், 'நாட்டின் மிக அழகான கிராமம்' என்று அழைக்கப்படுகிறது.

Updated On : 28 ஜூன் 2026, 4:01 am IST
பகிர்:

மேகங்களுக்கு மேலே அமைந்துள்ள மேகாலயாவின் கிராமமான நோங்ஜ்ரோங், 'நாட்டின் மிக அழகான கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு சூரிய உதயமும் மாயாஜால அனுபவத்தை அளிக்கும். ஜன்னலில் நின்றால் முதுகை உரசிச் செல்லும் மேகக் கூட்டத்தைக் கண்டு, தொட்டு உணரலாம். பள்ளத்தாக்குகளில் உறைந்துள்ள வெண்மையான மேகக் கடல் நதியைப் போன்றே சுற்றுலாப் பயணிகளுக்குத் தோன்றும். இங்கு மேகக் கூட்டங்கள், வனப்பகுதிகள், மலைகள் எங்கும் தங்கத்தைக் காய்ச்சி தெளிப்பதாய் அதிகாலையில் சூரியன் உதிக்கும் காட்சி வேறு எங்கேயும் காண முடியாது.

கிழக்கு காசி மலைகளில் மறைந்திருக்கும் இயற்கைப் பொக்கிஷமான நோங்ஜ்ரோங் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், 'உண்மையிலேயே மேகங்களுக்குள் தலை வைத்திருக்கும் இடம்' என்று வர்ணித்துள்ளார்.

மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய மேகங்களுக்கு மேலே நிற்கும் அனுபவம் பெற ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் பசுமையான மலைகளின் மீது அமைந்துள்ள நோங்ஜ்ரோங் போக வேண்டும். வானத்தில் மேகக் கடலில் மிதக்கும் ஒரு தீவு போல நோங்ஜ்ரோங் தோற்றமளிக்கிறது.

Advertisement

Advertisement

நோங்ஜ்ரோங்கின் அருகிலுள்ள டாவ்கியில் கண்ணாடி போன்ற தெளிவான நீருக்குப் பெயர் பெற்ற உம்ங்கோட் நதி கீழே உள்ள ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாய்கிறது.

இங்குள்ள அமைதியான, தனித்துவமான சூழலானது வணிகமயமாக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களைப் போலில்லாமல் நோங்ஜ்ரோங் இயற்கையோடு ஒன்றுசேர்ந்த கிராம வாழ்க்கையைத் தக்க வைத்துள்ளது. அக்டோபர் முதல் ஏப்ரல் வரையில் இங்கு சுற்றுலா செல்ல உகந்த மாதங்களாகும்.

இரண்டாயிரத்துக்கும் குறைவானோர் இங்கு வசித்தாலும், அவர்கள் ஆங்கிலம் மட்டும் பேசுகிறார்கள்.

இங்குள்ள அற்புதமான நீர்வீழ்ச்சிகள் புகைப்படக் கலைஞர்களுக்கும் , இயற்கை ஆர்வலர்களுக்கும் பரபரப்பான, இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அமைதியைத் தேடுபவர்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

குவாஹாத்தி அல்லது ஷில்லாங்கிலிருந்து நோங்ஜ்ரோங்கை அடையலாம். ஷில்லாங் நகரத்திலிருந்து நோங்ஜ்ரோங் கிராமம் சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பயணிக்கும்போது ரசிக்க வைக்கும் இயற்கை அழகு நோங்ஜ்ரோங்கின் இயற்கை அழகுக்கு முன்னுரை போன்று அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments