தினமணி கொண்டாட்டம்

360 டிகிரி 

DIN

• உலகிலேயே குரங்குக்கு என தனி பள்ளிக்கூடம் உள்ள நாடு தாய்லாந்து.
- சரஸ்வதி பஞ்சு

• லாவோஸ் நாட்டில் தான் மிக இள வயது ராணுவ வீரர்கள் பணியில் உள்ளனர். குறைந்த பட்ச வயது 16.

• சராசரியாக தினமும் 84 நிமிடங்கள் செலவு செய்கிறோம். எதற்காக? உணவு சாப்பிடுவதற்காக?

• 13-ஆம் எண்ணை துரதிருஷ்டமான எண்ணாகக் கருதும் நாடு அமெரிக்கா. அதிருஷ்ட எண்ணாகக் கருதும் நாடு இத்தாலி.
- கோ.ஜெயக்குமார்.

பறவைகள் ஓய்வெடுக்கும்போது காற்று வீசும் திசையை நோக்கியே அமர்ந்திருக்கும். உதாரணமாக, வடக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறதென்றால் பறவைகள் வடக்கு நோக்கியே அமர்ந்திருக்கும்.
- எல்.மோகனசுந்தரி

ரஷியாவின் டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை 9,289 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதுதான் உலகின் மிக நீளமான ரயில் பாதை.

குருபக்தி!
தமிழ்த் தாத்தா உ.வே.சா., மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் ஊருக்குச் செல்லும்போது மட்டும் செருப்பு அணிய மாட்டார். காரணம் உ.வே.சா.வின் குரு அவர்.

வாழ்க்கைப் பயணம்
"பத்து வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிறோம். பதினெட்டு வயதில் வாலிபப் பருவத்தையும், இருபது வயதில் முதல் காதலையும், முப்பது வயதில் மற்றவர்களிடம் கொண்ட நம்பிக்கையையும், அறுபது வயதில் இருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிறோம்''
- போளூர் சி.ரகுபதி.

ஜனாதிபதி ஆனால்...
மில்ட்டன் ஃபிரீட்மென் அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அவர் ஹாங்காங் நகருக்குச் சென்றபோது பத்திரிகை நிருபர் ஒருவர், அவரைச் சந்தித்து, "அமெரிக்க ஜனாதிபதி பதவியை ஒரு பொருளாதார நிபுணர் ஏற்றுக் கொண்டால், பொருளாதாரத்தைச் சரிபடுத்திவிட முடியும் என்று கருதுகிறீர்களா? உதாரணத்துக்கு நீங்களே ஜனாதிபதியாக வருவதாக இருந்தால்?'' என்று கேட்டார். 
அதற்கு ஃபிரீட்மென் புன்முறுவலுடன், "சரிசெய்ய இயலாது. காரணம், அப்போது ஒரு அரசியல்வாதி ஆகி விடுவேனே!'' என்றார்.
"சிரிக்க... ரசிக்க... சிந்திக்க...'' என்று நூலில் இருந்து...
- மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT