தினமணி கொண்டாட்டம்

தமிழ்நாட்டை கலக்கும் "ஜிமிக்கி' பாடல்!

DIN

தமிழ் ஊடகங்களில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது "ஜிமிக்கி கம்மல்' தான். "ஜிமிக்கி கம்மல்' என்னும் மலையாள நடன வீடியோ தமிழகத்தையும் கேரளத்தையும் ஒரு சேர ஆட்டிப் படைத்து வருகிறது .

தமிழ்ப் பாடல்களுக்கு அன்றும் சரி.. இன்றும் சரி... கேரளத்தில் எப்போதுமே தனி மவுசு. தமிழ் படங்களின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள் கேரளத்தில் நல்ல விற்பனையாகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் மலையாள படப் பாடல்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லை. அத்தி பூத்தது மாதிரி, அபூர்வமாக அன்று "செம்மீன்' மலையாள படப் பாடல்கள் தமிழகத்தைக் கவர்ந்திருந்தன. "ஃபார் த பீபிள்' படத்தின் "லஜ்ஜாவதியே..', "நேரம்', "பிரேமம்' மலையாள படங்களின் பாடல்கள் தமிழகத்தை வளைத்துப் போட்டிருந்தன. இந்தப் மலையாள படப் பாடல்களின் தாக்கத்தை விட தமிழகத்தையும், சமூக வலைத்தளங்களையும் டிரெண்டிங் பாட்டாகக் கொண்டாட வைத்திருக்கிறது, "ஜிமிக்கி கம்மல்' பாட்டு. இந்தப் பாடல் மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் "வெளிப்பாடிண்டே புஸ்தகம்" படத்தில் இடம் பெற்றிருக்கிறது. சூப்பர் ஹிட்டான "ஜிமிக்கி கம்மல்' பாட்டினை மெகா ஹிட்டாக்கி இருப்பது அந்தப் பாட்டிற்கு அசத்தல் ஆட்டம் போட்ட ஷெரில் மற்றும் அன்னாதான். தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி "பிரேமம்' படம் மூலம் கேரள இளைஞர்களின் மனதில் இடம் பிடிக்க... ஷெரில் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார்.

அதற்கு காரணம் ஷெரிலின் அழகும், நடன அசைவுகளும்தான். ஷெரிலின் "ஜிமிக்கி கம்மல்' பாட்டினை தமிழில் விஜயகாந்த், கவுண்டமணி, வடிவேலு, விஜய சேதுபதியின் பாடல் காட்சிகளில் தமிழ்ப் பாடலை எடுத்து விட்டு "ஜிமிக்கி கம்மல்' பாடலை சேர்த்து பதிவு செய்து சமூக தளங்களில் பதிவேற்றம் செய்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்து லட்சம் பேர்களைத் தாண்டிவிட்டதாம்..!

"ஜிமிக்கி கம்மல்' பாட்டினை தமிழகத்தில் பிரபலமாக்கிய ஷெரில் - அன்னா யார்... எதற்காக இந்த நடன நிகழ்ச்சியை படம் பிடித்தார்கள்.. ?
"வெளிப்பாடிண்டே புஸ்தகம்" படத்தில் வரும் "ஜிமிக்கி கம்மல்' பாடலை வைத்து நடன நிகழ்ச்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பிவைக்கலாம் என்று பட இயக்குநர் அறிவித்திருந்தார். அதற்கேற்ற மாதிரி ஓணம் திருவிழாவும், ஆசிரியர் தினமும் நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்த ஒரு நடன நிகழ்ச்சியை உருவாக்கலாம் என முடிவு செய்தோம். "ஜிமிக்கி கம்மல்' பாடல் ஹிட்டாகி இருந்ததால் அந்தப் பாட்டையே தெரிவு செய்து, நடன ஸ்டெப்களை வித்தியாசமாக அமைத்தோம். அந்த நடன அசைவுகள்தான் எங்களையும் பாட்டையும் தமிழகத்தில் கேரளத்தில் பிரபலமாக்கியிருக்கிறது. நானும் அன்னாவும் தோழிகள். எர்ணாகுளம் புனித தெரேசா கல்லூரியில் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தோம். கல்லூரி கலைவிழாக்களில் எங்கள் கல்லூரி முதல் இடம் பிடிக்கும். எங்களுக்கும் நல்ல நடனப் பயிற்சி கிடைத்திருக்கிறது. அந்த அனுபவம்தான் எங்களை வித்தியாசமாக ஸ்டெப்களை போட வைத்தது. தமிழ் நெட்டிசன்கள் எங்களை மிகவும் பிரபலப்படுத்தி விட்டார்கள். அவர்கள் எங்களைப் புகழ்ந்து எழுதும் மெஸேஜுகள் எனது இன்பாக்சில் நிரம்பி வழிகின்றன. அவர்களுக்கு எங்களின் நன்றிகள்..! தமிழகத்தில் சில "டாட் காம்கள்', "நான் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறேன்.. வாய்ப்பு வந்தால் நடிப்பேன் ..'என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை..!'' என்கிறார் ஷெரில். ஷெரில்-அன்னா இருவரும் கொச்சி வர்த்தக கல்லூரி ஒன்றில் ஆசிரியைகளாகப் பணிபுரிகிறார்கள்.
-பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT