தினமணி கொண்டாட்டம்

நான் செய்த குறும்பு

DIN

ரைட்டர் இமேஜினேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "நான் செய்த குறும்பு'. கயல் சந்திரன், அஞ்சுகுரியன் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி மகா விஷ்ணு இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர் பேசும்போது... ""தமிழ் சினிமாவில் எந்த டிரென்ட் படங்கள் வந்தாலும், காமெடி படங்களுக்கான வரவேற்பு என்பது குறையவே குறையாது. அந்த வகையில் இந்தப் படம் காமெடியை முன் வைத்து உருவாகி வருகிறது. இந்தக் கதையை கோடம்பாக்கத்தில் நான் சொல்லாத தயாரிப்பாளர்களே இல்லை. ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் துயரங்களை நாம் உணர முடியாது. உடலமைப்பு தொடங்கி, பருவ மாற்றங்கள் வரை அவர்களுக்கு ஒவ்வொரு கணமும் ரணம். இந்தக் கதையில் ஒரு பெண்ணின் அவஸ்தைகள், ஆனந்தம் என எல்லாமும் ஓர் ஆண் அனுபவிக்கிறான். உதாரணமாக ஆண் கருவுற்று விடுகிறான். அது எதனால் நேர்ந்தது.... எப்படி.... என்பதை சொல்லுவதே திரைக்கதை. இந்தப் பாணியில் ஹாலிவுட்டில் "ஜூனியர்' என்ற படம் வந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால், இதுவரை அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இது முழுக்க முழுக்க என் கற்பனையே'' என்றார் மகாவிஷ்ணு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT