தினமணி கொண்டாட்டம்

நயன்தாரா பாணியில் தன்ஷிகா!

DIN

ஜோதிகா, அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பல கதாநாயகிகள் தங்களை முன்னிறுத்தும் வகையிலான கதைகளை தேர்வு செய்து நடிக்கின்றனர். இதில் பலர் வெற்றியும் அடைந்துள்ளனர். இதனால் பல நடிகைகள் இந்த பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கபாலி' படத்தில் "யோகி' என்ற கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தவர் தன்ஷிகா. கம்பீர தோற்றம், கையில் துப்பாக்கி என கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது உடல் மொழியால் ஆக்ஷன் காட்சிகளில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதேபோன்று தான் எடுக்கும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி நடிக்கும் இயல்பு கொண்ட தன்ஷிகா சினிமா உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் "யோகிடா'. கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தில் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். "வேதாளம்', "காஞ்சனா' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் சிங் இதில் வில்லனாக நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக எஸ்.கே. பூபதி பணியாற்றுகிறார். படத் தொகுப்பாளராக ஜி.சசிகுமாரும் பணியாற்றுகிறார். ரஹ்மானின் சகோதரியான இஷ்ராத் க்வாத்ரி இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் , படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தன்ஷிகாவின் "யோகி' கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT