தினமணி கொண்டாட்டம்

என்.டி.ஆரை முந்தும் ஒய்.எஸ்.ஆர்

தினமணி

ஆந்திர மாநில சினிமாவைப் பொருத்தவரை இது வாழ்க்கை வரலாற்று பட சீஸன். மறைந்த ஆந்திர முதல்வர்கள் என்.டி.ஆர்., ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் வாழ்க்கை தழுவல் படங்கள் உருவாகின்றன. என்.டி.ஆர். வாழ்க்கையைச் சொல்லும் என்.டி.ஆர். பயோபிக் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது "யாத்ரா' படம். தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. எம்ஜிஆரின் வாழ்க்கையை தழுவிய படம் தமிழில் உருவாகி வருகிறது. இதற்கிடையே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பற்றிய படமும் எடுக்க உள்ளனர். இந்த படங்களையெல்லாம் முந்திக்கொண்டு "யாத்ரா' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் டீஸரும் ரிலீசாகியுள்ளது. ஆந்திர சினிமாவில் மூன்று முதல்வர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருவதால், அந்தந்த பட இயக்குநர்கள் போட்டி போட்டு தங்களது படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT